சேலம் : சேலம் மாவட்டம் கந்தம்பட்டி நெடுஞ்சாலை பகுதியில் உள்ள கரும்பு காட்டுக்குள் சிறுத்தை புகுந்ததாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இங்குள்ள கந்தம்பட்டி நெடுஞ்சாலை சாலை அருகே தங்கவேல் என்பவருக்குச் சொந்தமான சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் கரும்பு தோட்டம் ஒன்று அமைந்துள்ளது.
இந்தக் கரும்பு தோட்டத்தை பார்வையிட சனிக்கிழமை (ஜூன் 26) மாலை தங்கவேல் வந்துள்ளார் . அப்போது, தோட்டத்தின் வெளிப்பகுதியில் குடியிருக்கும் வனிதா என்பவர் கரும்பு காட்டுக்குள் புலி புகுந்து உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து தங்கவேல் வனத்துறை மற்றும் காவல்துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்து உதவிக் கேட்டுள்ளார். இதன் பேரில், கரும்பு தோட்டத்திற்கு வந்த மாவட்ட வன அலுவலர்கள் மற்றும் காவலர்கள் கரும்புக் காட்டில் நுழைந்து புலியை தேடினர். ஆனாலும் புலியை கண்டுபிடிக்கமுடியவில்லை.
இதைத் தொடர்ந்து, காட்டில் மண்ணில் புதைந்திருந்த கால் தடங்களை வைத்து அவர்கள் ஆய்வு செய்ததில் அது புலியல்ல சிறுத்தை என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மாவட்ட வன அலுவலர் முருகன் தலைமையில் அலுவலர்கள் தீவிரமாக சிறுத்தையை தேடும் பணியில் இறங்கியுள்ளனர்.
இதையும் படிங்க : இரவு நேரத்தில் ஊருக்குள் உலாவும் சிறுத்தைகள்: அச்சத்தில் பொதுமக்கள்