ETV Bharat / city

டாஸ்மாக் கொள்ளை ; ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சேலம் : தமிழ்நாடு அரசு சார்பில் நடத்தப்பட்டுவரும் மதுபானக் கடைகளில் நடைபெறும் கொள்ளைச் சம்பவங்களை தடுத்து நிறுத்த வலியுறுத்தி தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

டாஸ்மாக் கொள்ளை ; ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
author img

By

Published : Jul 29, 2019, 6:03 PM IST

தமிழ்நாடு அரசின் சார்பில் நடத்தப்பட்டுவரும் மதுபானக் கடைகளில் சமீபகாலமாகவே கொள்ளைச் சம்பவங்கள் நடந்த வண்ணம் உள்ளன. இதை தடுத்து நிறுத்த இன்று சேலத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் மாநில செயலாளர் முருகேசன், மாநில பிரசார செயலாளர் சுகமதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

"தமிழ்நாடு அரசு மதுபான நிறுவனமான டாஸ்மாக்கில் சட்டத்திற்குப் புறம்பாக நடைபெறும் கொள்ளைகளைத் தடுத்து நிறுத்தவும், ஒரு மாவட்டத்தின் மேலாளர் இன்னொரு மாவட்டத்திற்கு சென்று ஆய்வு செய்வதை தடுக்கவும், மாதாந்திர லஞ்சம் கொடுக்கவில்லை என்றால் டாஸ்மாக் பணியாளர்களை அடிக்கடி மேல் அதிகாரிகள் இடம் மாற்றுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

Intro:தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்டுவரும் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் நடைபெறும் கொள்ளைச் சம்பவங்களை தடுத்து நிறுத்த வலியுறுத்தி தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.Body:சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் மாநில செயலாளர் முருகேசன், மாநில பிரச்சார செயலாளர் சுகமதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் டாஸ்மாக் பணியாளர் களை பாதுகாக்க வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டம் குறித்து ஊடகங்களுக்கு பேட்டியளித்த தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் பிரச்சார செயலாளர் சுமதி கூறுகையில்,' தமிழ்நாடு அரசு மதுபான நிறுவனமான டாஸ்மாக்கில் சட்டத்திற்குப் புறம்பாக நடைபெறும் கொள்ளை களைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

ஒரு மாவட்டத்தின் மேலாளர் இன்னொரு மாவட்டத்திற்கு சென்று ஆய்வு செய்வதை நிறுத்த வேண்டும்.

மேல் அதிகாரிகளுக்கு புரோக்கர் வேலை பார்க்காத சங்க நிர்வாகிகளை பழிவாங்கும் நோக்கோடு டாஸ்மாக் அதிகாரிகள் நடந்து கொள்வதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.

மேலும் மாதாந்திர லஞ்சம் கொடுக்கவில்லை என்றால் டாஸ்மாக் பணியாளர்களை அடிக்கடி மேல் அதிகாரிகள் இடம் மாறுதல் செய்து கொடுமைப்படுத்துகின்றனர் .

இந்த முறைகேடுகளை உடனடியாக தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் ' என்று தெரிவித்தார்.Conclusion:ஆர்ப்பாட்டத்தில் டாஸ்மாக் மேல் அதிகாரிகளை கண்டித்தும் அவர்களின் முறையீடுகளை கண்டுகொள்ளாமல் இருக்கும் தமிழக அரசைக் கண்டித்தும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.