குடும்ப நல நீதிமன்ற நீதிபதி பத்மாவின் செயல்பாட்டைக் கண்டித்து கடந்த நவம்பர் 8ஆம் தேதி முதல் குடும்பநல நீதிமன்றப் பணிகளை புறக்கணித்து வந்த நிலையில், நேற்றும் இன்றும் தமிழ்நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பணியாற்றும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் இன்று (நவ.20) இரண்டாவது நாளாக பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் நீதிமன்றப் பணிகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக சேலம் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கச் செயலர் முத்தமிழ்ச்செல்வன் கூறுகையில், "சேலம் குடும்ப நல நீதிமன்ற நீதிபதி பத்மாவின் செயல்பாட்டைக் கண்டித்தும் தமிழ்நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.
விரைவில் காலிப் பணியிடங்கள் நிரப்ப வேண்டும் வழக்கறிஞர்களை நீதிபதிகள் மதித்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.
சேலம் மாவட்டத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பணிப் புறக்கணிப்பு செய்து வருவதால், ஏராளமான வழக்குகள் இரண்டு நாள்களாக தேக்கமடைந்து நீதிமன்றப் பணிகள் முழுவதும் பாதிப்படைந்துள்ளன” எனத் தெரிவித்தனர்.
வழக்கறிஞர்களின் இந்தப் போராட்டத்தால் சேலம் நீதிமன்றம் வெறிச்சோடி காணப்பட்டது.
இதையும் படிங்க: கோவை மாணவி தற்கொலை வழக்கு: பள்ளி முதல்வர் பிணை மனு தள்ளிவைப்பு