சேலம் எடப்பாடி தொகுதி, நங்கவள்ளி ஒன்றியம் பள்ளக்கானுரில் உயர் மின்னழுத்த கோபுரத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பவர்கிரிட் நிறுவனத்தைக் கண்டித்து மறியல் போராட்டம் நடந்ததால் பரபரப்பு நிலவியது.
இப்போராட்டத்தில் உயர் மின் கோபுர விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பெருமாள், சிபிஎம் நங்கவள்ளி ஒன்றிய செயலாளர் மேவை.சண்முகராஜா, விவசாய சங்க சங்ககிரி தாலுகா செயலாளர் ராஜேந்திரன், மாதர் சங்க மாவட்ட உதவி தலைவர் ராஜாத்தி, விவசாய சங்க தலைவர்கள் சுரேஷ், குருநாதன், சத்தியமூர்த்தி, ஜெயவேல், பழனிசாமி, சாமிநாதன், மாதையன், சுந்தரம், செந்தில், கண்ணன், சின்னதம்பி, உட்பட நூற்றுக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்றனர்.
ஆபரேசன் 1... டிமிக்கி வாத்தியார் சஸ்பெண்ட், ஆபரேசன் 2... சத்துணவு சாப்பாடு: அதிரடி காட்டிய ஆட்சியர்
போராட்டத்தின்போது பவர் கிரிட் நிறுவனத்தை கண்டித்தும், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் விவசாயிகள் கண்டன கோஷங்கள் எழுப்பினர். போராட்டத்தின் முடிவில் நடந்த பேச்சுவார்த்தையில் பவர் கிரிட் மண்டல மேலாளர் சத்தியநாராயணன் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியதால் தீர்வு காணப்பட்டது. ஏழு நாட்களுக்குள் விவசாயிகளுக்கான இழப்பீட்டுத் தொகையை பவர் கிரிட் நிறுவனம் வழங்கும் என்று உறுதி செய்ததன் அடிப்படையில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.