ETV Bharat / city

'7ஆவது பொருளாதார கணக்கெடுப்புக்கு ஒத்துழைப்பு தருக' - salem collector rohini

சேலம்: மாவட்டத்தில் ஏழாவது பொருளாதார கணக்கெடுப்பின்போது பொதுமக்கள், வணிகர்கள், தொழில் அமைப்பினர் முழு ஒத்துழைப்பு அளித்து உண்மையான தகவல்களை அளித்து நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆட்சியர் ரோகிணி
author img

By

Published : Jun 20, 2019, 3:52 PM IST

மத்திய அரசின் புள்ளியியல்; திட்டச் செயலாக்கம் அமைச்சகத்தின் மூலம் பொருளாதார கணக்கெடுப்பு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் ஏழாவது பொருளாதார கணக்கெடுக்கும் பணி தற்போது தொடங்க உள்ளது. இதில் பொதுச்சேவை மையங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட கணக்கு கொடுப்பவர்கள் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

இதையடுத்து சேலத்தில் நடைபெற உள்ள பொருளாதார கணக்கெடுப்பு பணியில் ஈடுபாடு உள்ள கணக்கெடுப்பாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் இன்று நடைபெற்றது. இந்த முகாமினை சேலம் மாவட்ட ஆட்சியர் ரோஹிணி தொடங்கிவைத்து நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பொருளாதார கணக்கெடுப்பின் அவசியம் குறித்துச் சிறப்புரையாற்றினார்.

7ஆவது பொருளாதார கணக்கெடுப்புக்கு ஒத்துழைப்புத் தருக; ஆட்சியர் ரோஹிணி
தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ரோஹிணி, 'சேலம் மாவட்டத்தில் ஏழாவது பொருளாதார கணக்கெடுப்புப் பணி விரைவில் தொடங்க உள்ளது. இந்தப் பணியில் ஈடுபாடு உள்ள கணக்கெடுப்பு பணியாளர்களுக்கான ஒரு நாள் சிறப்புப் பயிற்சி வகுப்பு இன்று நடைபெற்றுவருகிறது.
இந்தக் கணக்கெடுப்பு பணியானது 3 மாதம் நடைபெறும். கணக்கெடுப்பு பணியின்போது பணியாளர்களுக்குப் பொதுமக்கள், வணிகர்கள், தொழில் அமைப்புகள் முழு ஒத்துழைப்பு அளித்து உண்மையான தகவல்களைத் தந்து நாட்டின் வளர்ச்சிக்கு உதவிட வேண்டும்.
தொடர்ந்து இந்தியாவில் முதல் முறையாக ஜிபிஎஸ் (தடங்காட்டி) தொழில்நுட்பம், கைப்பேசி செயலி மூலம் இந்த கணக்கெடுப்பு பணி நடைபெற இருப்பதால் வணிக நிறுவனங்களின் அமைவிடம் தொழில்கள் குறித்து எதிர்கால பொருளாதார திட்டமிடலைச் சிறப்பாகச் செய்ய முடியும்' எனத் தெரிவித்தார்.

Intro:சேலத்தில் நடைபெற உள்ள ஏழாவது பொருளாதார கணக்கெடுப்பின்போது பொதுமக்கள் வணிகர்கள் மற்றும் தொழில் அமைப்பினர் முழு ஒத்துழைப்பு அளித்து உண்மையான தகவல்களை அழித்து நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்.

Body:மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் ரோகிணி திட்ட செயலாக்கம் அமைச்சகத்தின் மூலம் பொருளாதார கணக்கெடுப்பு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுவது வழக்கம்.

அந்தவகையில் ஏழாவது பொருளாதார கணக்கெடுக்கும் பணி தற்போது துவங்க உள்ளது இதில் பொது சேவை மையங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கணக்கு கொடுப்பார்கள் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

இதையடுத்து சேலத்தில் நடைபெற உள்ள பொருளாதார கணக்கெடுப்பு பணியில் ஈடுபாடு உள்ள கணக்கெடுப்பாளர் களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் இன்று நடைபெற்றது.

இந்த முகாமினை சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி துவக்கி வைத்து நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பொருளாதார கணக்கெடுப்பின் அவசியம் குறித்து சிறப்புரையாற்றினார்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாவட்ட ஆட்சியர் ரோகினி சேலம் மாவட்டத்தில் ஏழாவது பொருளாதார கணக்கெடுப்பு பணி விரைவில் தொடங்க உள்ளதாகவும் இந்தப் பணியில் ஈடுபாடு உள்ள கணக்கெடுப்பு பணியாளர்களுக்கான ஒரு நாள் சிறப்பு பயிற்சி வகுப்பு இன்று நடைபெற்று வருவதாகவும் இந்த கணக்கெடுப்பு பணியானது 3 மாதம் நடைபெறும் என தெரிவித்த நாச்சியார் கணக்கெடுப்பு பணியின்போது பணியாளர்களுக்கு பொதுமக்கள் வணிகர்கள் மற்றும் தொழில் அமைப்புகள் முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு உண்மையான தகவல்களை தந்து நாட்டின் வளர்ச்சிக்கு முழு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து இந்தியாவில் முதல் முறையாக ஜிபிஎஸ் தொழில்நுட்பம் மற்றும் செல்போன் ஆப்ஸ் மூலம் இந்த கணக்கெடுப்பு பணி நடைபெற இருப்பதால் வணிக நிறுவனங்களின் அமைவிடம் தொழில்கள் குறித்து எதிர்கால பொருளாதார திட்டமிடலை சிறப்பாக செய்ய முடியும் என தெரிவித்தார்.

பேட்டி :ரோகிணி - சேலம் மாவட்ட ஆட்சியர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.