ETV Bharat / city

ஏடிஎம்-இல் கொள்ளை முயற்சி; இயந்திரத்தை உடைக்க முடியாததால் பணம் தப்பியது! - cctv footage

சேலம்: கரூர் வைஸ்யா வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் தொடர்பான காணொளி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏடிஎம்-இல் கொள்ளை முயற்சி; எந்திரத்தை உடைக்க முடியாததால் பணம் தப்பியது!
author img

By

Published : Jul 25, 2019, 6:01 PM IST

சேலம் மாநகராட்சியின் 43ஆவது டிவிசனில் உள்ளது கிச்சிபாளையம். இங்குள்ள திருமலை நகர் பகுதியில் கரூர் வைஸ்யா வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது. இந்த மையத்துக்குள் நள்ளிரவில் புகுந்த ஒருவர், ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சித்திருக்கிறார். இக்கொள்ளை சம்பவம் குறித்து கண்காணிப்பு புகைப்படக் கருவியின் காட்சிகள் மூலம் கரூர் வைஸ்யா வங்கியின் மும்பை அலுவலகத்திற்கு தெரிந்தது.

உடனே மும்பையில் இருந்து வங்கி அலுவலர்கள், சேலம் கிச்சிப்பாளையம் காவல் நிலையத்திற்கு ,ஏடிஎம் மையத்தில் கொள்ளையர் புகுந்து கொள்ளை அடிப்பது குறித்து தெரிவித்தனர். ஆனால் காவல்துறையினர் வருவதற்குள், இயந்திரத்தை உடைக்கமுடியாததால் கொள்ளையர் தப்பி சென்றுவிட்டார். இக்கொள்ளையை அறிந்த சேலம் மாநகர காவல் துணை ஆணையாளர் தங்கதுரை மற்றும் சேலம் நகர உதவி ஆணையர் ஈஸ்வரன், காவல் ஆய்வாளர்கள் சரவணன், குமார் ஆகியோரும் ஏடிஎம் மையத்திற்கு சென்று விசாரித்தனர் .

ஏடிஎம்-இல் கொள்ளை முயற்சி; இயந்திரத்தை உடைக்க முடியாததால் பணம் தப்பியது!

பிறகு ஏடிஎம் மையத்திற்கு மோப்ப நாய் வரவழைத்து தடையங்கள் சேகரிக்கப்பட்டன. இதுதவிர கைரேகை நிபுணர்களும் அழைத்து வந்து கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. இந்த ஏடிஎம் மையத்தில் ஐந்து லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் வைக்கப்பட்டிருக்கிறது. இதே ஏடிஎம் மையத்தில், கடந்த ஐந்து மாதத்திற்கு முன்பு கொள்ளையர்கள் புகுந்து கொள்ளை அடிக்க முயற்சி நடந்ததுள்ளது குறிப்பிடத்தக்கது.

Intro:சேலத்தில் வங்கி ஏடிஎம் உடைத்து கொள்ளை முயற்சி ரூபாய் 5 லட்சம் பணம் தப்பியது .Body:சேலம்

சேலத்தில் நள்ளிரவில் கரூர் வைசியா வங்கியின் ஏடிஎம் உடைத்து கொள்ளை முயற்சி நடந்தது .
இதில் வைத்திருந்த ரொக்கப்பணம் ரூபாய்
5 லட்சம் தப்பியது.

சேலம் மாநகராட்சி
43 வது டிவிசனின் உள்ளது கிச்சிபாளையம்.

இங்குள்ள திருமலை நகர் பகுதியில் கரூர் வைசியா வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது. இந்த வங்கியில் நள்ளிரவு இரண்டு திருடர்கள் சிலர் புகுந்து ஏடிஎம் எந்திரத்தை உடைத்து பணம் கொள்ளை அடிக்க முயற்சி செய்தனர்.

கொள்ளையர் ஏடிஎம் மையத்தில் புகுந்து கொள்ளை அடிக்க முயற்சி செய்வது காமிரா மூலம் கரூர் வைஸ்யா வங்கியின் மும்பை அலுவலகத்திற்கு தெரிந்தது .உடனே மும்பையில் இருந்து வங்கி அதிகாரிகள் சேலம் கிச்சிப்பாளையம் காவல் நிலையத்திற்கு ஏடிஎம் மையத்தில் கொள்ளையர் புகுந்து கொள்ளை அடிப்பது குறித்து தெரிவித்தனர்.

உடனே கிச்சிபாளையம் போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.

ஆனால் அதற்குள் கொள்ளையர் ஏடிஎம் மையத்தை உடைக்க முடியாததால் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர் .
இந்த கொள்ளையை அறிந்த சேலம் மாநகர காவல் துணை ஆணையாளர் தங்கதுரை மற்றும் சேலம் டவுன் உதவி கமிஷனர் ஈஸ்வரன், காவல் ஆய்வாளர்கள் சரவணன் மற்றும் குமார் ஆகியோரும் ஏடிஎம் மையத்திற்கு வந்து விசாரித்தனர் .

பிறகு ஏடிஎம் மையத்திற்கு போலீஸ் மோப்ப அழைத்து வந்து மோப்பம் பிடிக்க விடப்பட்டது .

இது தவிர கைரேகை நிபுணர்களும் அழைத்து வந்து கைரேகைகள் பதிவு செய்யப்பட்டது. இந்த ஏடிஎம் மையத்தில் ரூபாய் 5 லட்சம் ரொக்கப் பணம் வைக்கப்பட்டிருக்கிறது. கொள்ளையர்களால் ஏடிஎம் மையத்தை உடைக்க முடியாததால் இந்த ரொக்கப் பணம் முழுவதும் தப்பியது.
இந்த ஏடிஎம் மையத்தில் கடந்த 5 மாதத்திற்கு முன்பு கொள்ளையர்கள் புகுந்து கொள்ளை அடிக்க முயற்சி நடந்தது. இதனையடுத்து கிச்சிப்பாளையம் போலீசார் அவ்வப்போது ரோந்து வந்து கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையிலும் நேற்று நள்ளிரவு கொள்ளையர்கள் புகுந்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது .
இந்த கொள்ளை முயற்சியில் இரண்டு திருடர்கள் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. ஏடிஎம் மையத்தில் உள்ள காமிராவில் பதிந்துள்ள 2 வாலிபர்கள் உருவத்தை வைத்து தற்போது போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள் .
இந்த கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்களை உடனே கைது செய்ய சேலம் மாநகர காவல் ஆணையாளர் செந்தில்குமார் தனிப்படை அமைத்து உள்ளார் .Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.