ETV Bharat / city

’காய்ச்சல் பாதிப்பு இருந்தால் அரசு மருத்துவர்களை அணுகுங்கள்’

சேலம்: காய்ச்சல் பாதிப்பு இருந்தால் பொதுமக்கள் போலி மருத்துவர்களை அணுகாமல் அரசு மருத்துவர்களை உடனடியாக அணுக வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ராமன் அறிவுறுத்தியுள்ளார்.

SALAM COLLECTOR VISIT GH
author img

By

Published : Oct 3, 2019, 12:59 AM IST

சேலம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தால் காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட நோய்களால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சேலம் தலைமை அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளது. எனவே இவர்களுக்கென பிரத்தியேக வார்டு ஒன்று தனியாக அமைக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளின் நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

ராமன்- சேலம் மாவட்ட ஆட்சியர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராமன், 24 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் மாவட்டம் முழுவதும் 44 பேர் டெங்கு காய்ச்சலாலும், 182 பேர் சாதரண காய்ச்சலாலும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்” எனத் தெரிவித்தார்.

மேலும் காய்ச்சல் பாதிப்பு இருந்தால் பொதுமக்கள் போலி மருத்துவர்களை அணுகாமல் அரசு மருத்துவர்களை உடனடியாக அணுக வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: சென்னையில் பிரபல ரவுடி பினு மீண்டும் கைது!

Intro:சேலம் மாவட்டத்தில் 44 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் டெங்கு பாதிப்பு அதிகம் ஏற்பட்டுள்ள பகுதிகளை கண்டறிந்து அந்த பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Body:மழை மற்றும் காலநிலை மாற்றத்தால் சேலம் மாவட்டத்தில் காய்ச்சல், சளி, இரும்பல், உடல் வலி உள்ளிட்ட ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சல் நோயாளிகள் திடீர் அதிகரிப்பால் தலைமை அரசு மருத்துவமனையில் இவர்களுக்கென பிரத்தியேக வார்டு அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் கட்டில் களுக்கு தனித்தனியாக கொசுவலை கட்டப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் தலைமை அரசு மருத்துவமனையில் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதில் டெங்கு மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மற்றும் மருத்துவர்களிடம் காய்ச்சல் பாதிப்பு மற்றும் சிகிச்சை முறை குறித்து கேட்டறிந்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராமன். சேலம் அரசு மருத்துவமனையில் 24 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், இவர்கள் உள்பட மாவட்டம் முழுவதும் 44 பேர் டெங்கு காய்ச்சலும், 182 பேர் காய்ச்சலும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உள்ள இடங்களை கண்டறிந்து அந்தப் பகுதிகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ளும் என தெரிவித்த அவர் டெங்கு பாதிப்பு அதிகம் ஏற்பட்டுள்ள பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் காய்ச்சல் பாதிப்பு இருந்தால் பொதுமக்கள் போலி மருத்துவர்கள் அணுகாமல் அரசு மருத்துவரை உடனடியாக அணுக வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

பேட்டி: ராமன்- சேலம் மாவட்ட ஆட்சியர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.