சேலம்: தாதகாப்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடித்து (Cylinder Blast) ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாயும், படுகாயமடைந்து சிகிச்சைப் பெற்று வருபவர்களுக்குத் தலா 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'சேலம் மாவட்டம் தெற்கு வட்டம் தாதகாப்பட்டி கிராமத்தில் கோபி என்பவரது வீட்டில் எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்தில் அப்பகுதியியைச் சேர்ந்த பத்மநாபன், தேவி, கார்த்திக் ராம், எல்லம்மாள், ராஜலட்சுமி ஆகிய ஐந்து பேரும் உயிரிழந்த செய்தி கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
![தரைமட்டமான கட்டடம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13716486_thu.jpg)
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்விபத்தில் உயிரிழந்தவர்கள் ஒவ்வொருவரின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாயும், படுகாயமடைந்து சிகிச்சைப் பெற்று வருபவர்களுக்குத் தலா 50 ஆயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: cylinder blast: விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்த கே.என்.நேரு