சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள செல்லியம்பாளையம் பகுதியில் ஆத்தூர் டிஎஸ்பி இமானுவேல் ஞானசேகரன் தலைமையிலான காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த மஹிந்திரா பொலிரோ வாகனத்தை மறித்து காவல் துறையினர் சோதனையில் செய்தனர். அதில் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பான்பராக், குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் வாகனத்தை இயக்கிய ஆத்தூர் தளவாய்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி (38) என்பவரிடம் நடத்திய விசாரணையில் பெங்களூருவில் இருந்து ஆத்தூர் வழியாக மன்னார்குடிக்கு குட்கா பொருள்களை ஏற்றிக்கொண்டு சென்றது தெரியவந்தது.
இதனை அடுத்து அவரை கைது செய்த காவல் துறையினர் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா பொருள்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: அனைத்து மாவட்டங்களிலும் சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையங்கள்!