ETV Bharat / city

நடுரோட்டில் அண்ணனின் சடலம்.. பாதை விடாத தம்பிகளால் போராட்டம்.. - road problem for burial ground

சேலம் அருகே பாதை பிரச்னையால் அண்ணனின் சடலத்தை கொண்டு செல்ல தம்பிகள் தடை விதித்ததால் உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

நடுரோட்டில் அண்ணனின் சடலம்.. பாதை விடாத தம்பிமார்களால் போராட்டம்..

author img

By

Published : Jul 1, 2021, 11:09 PM IST

சேலம்: நெய்க்காரப்பட்டி அருகே உள்ள மலங்காடு பகுதியைச் சேர்ந்தவர் அய்யனாரப்பன்(70). விவசாயியான இவருக்கும், இவருடைய சகோதர்களான ராஜா, அய்யம்பெருமாள் ஆகிய மூன்றுபேருக்கும் அப்பகுதியில் இரண்டரை ஏக்கர் பூர்வீக நிலம் உள்ளது.

இந்த நிலத்தை பிரித்துக் கொள்வதில் ஏற்பட்ட தகராறு காரணமாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மூன்றுபேரும் தோட்டத்திற்குள் வீடு கட்டி வசித்து வருகின்றனர். தோட்டத்திற்குள் இருந்து வெளியே வருவதற்காக பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதனை மூன்று பேரும் பயன்படுத்தி வருகின்றனர்.

அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பி கூட உதவ மாட்டாங்க

இந்த நிலையில் வயது மூப்பு காரணமாக அய்யனாரப்பன் இன்று காலமானார். அவரின் சடலத்தை எடுத்துச்சென்று அடக்கம் செய்யும் பணியில் உறவினர்கள் ஈடுபட்டனர்.

சடலத்தை பாதையில் வைத்து போராட்டம்

தோட்டத்திற்குள் உள்ள வீட்டில் இருந்து சடலத்தை பாடை கட்டி சுமந்து வந்தபோது, சகோதரர்களான ராஜா, அய்யம்பெருமாள் ஆகியோரின் குடும்பத்தினர் சவ ஊர்வலத்தை தடுத்து நிறுத்தினர்.

மேலும் அந்த பாதை வழியாக சடலத்தை எடுத்துச் செல்லக் கூடாது என்றும் தெரிவித்துள்ளனர். இதனால் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் பெண்கள் சிலர் காயமடைந்தனர்.

இது குறித்து தகவலறிந்த கொண்டலாம்பட்டி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் காரணமாக சுமார் நான்கு மணிநேரமாக சடலம் வழியிலேயே கிடத்தி வைக்கப்பட்டிருந்தது. இறுதியாக சடலத்தை எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப் பட்டதையடுத்து உறவினர்கள் அடக்கம் செய்தனர்.

இதையும் படிங்க: 'பில்டிங் இல்ல... பிளான் இருக்கு..' - விரைவில் எய்ம்ஸ் கல்லூரியில் மாணவர் சேர்க்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.