ETV Bharat / city

நடிக்க வைப்பதாக கூறி ஆபாச போட்டோ எடுத்த விவகாரம்...வாக்குமூலம் கொடுத்த போலி இயக்குநர் - பெண்கள் சிறை

சினிமா சான்ஸ் தருவதாக கூறி பெண்களை ஆபாச படம் எடுத்த புகாரில் கைதான போலி இயக்குநர் 2 பெண்களை ஆபாச படம் எடுத்ததாக காவல்துறையினரிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

நடிக்க வைப்பதாக கூறி ஆபாச போட்டோ எடுத்த விவகாரம்

author img

By

Published : Sep 12, 2022, 1:05 PM IST

சேலம்: எடப்பாடியைச் சேர்ந்த வேல் சத்ரியன் பெண்களை சினிமாவில் சேர்த்து விடுவதாக தெரிவித்து ஆபாச வீடியோ எடுத்ததாக கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது உதவியாளர் ஜெயஜோதியும் கைது செய்யப்பட்டு பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரை சேலம் சூரமங்கலம் உதவி கமிஷனர் நாகராஜன் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் 6 நாள் போலீஸ் காவல் எடுத்து விசாரணை செய்தனர்.

இந்த நிலையில் இன்று(செப்.12) பிற்பகலில் வேல் சத்திரியனிடம் சேலம் துணை கமிஷனர் மாடசாமி சூரமங்கலம் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்தார். அப்போது வேல் சத்திரியன் சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி பலரிடம் பணம் பெற்று திருப்பி தராததை ஒப்புக்கொண்டார். அவரது சொந்த ஊரான எடப்பாடிக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவரது வீட்டில் காவல்துறையினர் சோதனை செய்தனர்.

பின்னர் மீண்டும் வேல் சத்ரியன் சேலம் சூரமங்கலம் காவல் நிலையம் அழைத்து வரப்பட்டு விசாரணை நடந்தது. பிறகு வேல்சத்ரியன் மாஜிஸ்திரேட் முன் ஆஜர் படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 6 நாள் போலீஸ் காவலில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வேல் சத்திரியன் மூன்று நாளிலேயே விசாரணை முடிந்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவர் அளித்த வாக்குமூலத்தில் இரண்டே இரண்டு பெண்களை மட்டும் ஆபாச வீடியோ எடுத்ததாகவும், சுமார் 25 பேரிடம் 10 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை பணம் பெற்றுக் கொண்டு சினிமாவில் நடிக்க வைப்பதாக தெரிவித்ததாகவும், இந்த பணத்தை திருப்பித் தரவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். வேல் சத்ரியன் தெரிவித்த வாக்குமூலத்தில் கூறியபடி அவர் யார் யாரிடம் பணம் பெற்று ஏமாற்றியுள்ளார். அவர்கள் யார் யார் என்று தற்போது விசாரணை நடக்கிறது.

வேல் சத்திரியனிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு பெண்கள் மற்றும் ஆண்களிடம் இருந்து சினிமாவில் சேர்த்து விடுவதாக பல லட்சம் பெற்று ஏமாற்றி உள்ளதும் தெரிய வந்துள்ளது. வேல் சத்திரியன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதை அறிந்த பலரும், சேலம் சூரமங்கலம் காவல் நிலையம் வந்து தங்களது பணத்தை பெற்று தருமாறு புகார் அளித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: நடிகையின் தொலைபேசி எண் கேட்டு ஒளிப்பதிவாளருக்கு கொலை மிரட்டல்... இயக்குனரிடம் போலீஸ் விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.