ETV Bharat / city

ஓட்டிப் பார்ப்பதாக கூறி புல்லட் திருட்டு: காதல் ஜோடி கைது - புல்லட் திருட்டு

சேலத்தில் ஓட்டிப் பார்ப்பதாக கூறி புல்லட்டுடன் தலைமறைவான காதல் ஜோடியை காவல் துறையினர் கைது செய்தனர்.

காதல் ஜோடி கைது
காதல் ஜோடி கைது
author img

By

Published : Apr 6, 2022, 11:18 AM IST

சேலம்: மாநகர் சாந்தி தியேட்டர் அருகே இருசக்கர வாகன கன்சல்டிங் விற்பனையகம் உள்ளது. இங்கு கடந்த ஜனவரி மாதம் இளம் காதல் ஜோடி வந்துள்ளனர். அப்போது அவர்கள், ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான புல்லட்டை தேர்வு செய்துள்ளனர். அந்த வாகனத்தை ஓட்டி பார்த்து விட்டு வருவதாக கூறி சென்றுள்ளனர்.

அதன் பின்னர் அவர்கள் திரும்பி வரவில்லை. இதனையடுத்து சந்தேகமடைந்த கடை உரிமையாளர் சேலம் மாநகர குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் தகவல் கொடுத்தார். விசாரணையில், எடுத்துச் செல்லப்பட்ட இருசக்கர வாகனத்திற்கு முன்பணமாக ரூ.25 ஆயிரம் பணத்தை அவர்கள் கொடுத்துள்ளனர்.

தப்பிச் சென்றவர்கள் பிரவீன், ப்ரீத்தி என்பதும் இவர்களுக்கு பிரவீன் சகோதரர் அரவிந்த் உதவியுள்ளார் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் விசாரணயில் பிரவீன், அரவிந்த் ஆகியோர் சேலம் பொன்னம்மாப்பேட்டை செங்கல் அணையை சேர்ந்த பழனிசாமி என்பவரின் மகன்கள் என்பதும் தெரியவந்தது.

புல்லட் திருட்டு

இதையடுத்து இருசக்கர வாகனத்துடன் தலைமறைவான காதல் ஜோடியை கைது செய்ய சேலம் மாநகர காவல் ஆணையர் நஜ்முல் ஹோதா உத்தரவிட்டார். அதன்படி துணை ஆணையர் மோகன் ராஜ் மேற்பார்வையில் உதவி ஆணையர் வெங்கடேஷ் தலைமையிலான தனிப்படையினர் காதல் ஜோடி செல்போன் சிக்னல் மூலம் பெங்களூருவில் முகாமிட்டுள்ளதை கண்டுபிடித்தனர்

காதல் ஜோடி கைது
காதல் ஜோடி கைது

தொடர்ந்து, கோலார் பகுதியில் பதுங்கியிருந்த காதல் ஜோடியை இன்று (ஏப்ரல் 6) காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் பிரவீன் சகோதரர் அரவிந்த் என்பவரையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஓய்வுபெற்ற நீதிபதியின் வீட்டில் கொள்ளை: நேபாளம் கொள்ளையர்கள் கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.