ETV Bharat / city

சேலம் அரசு மருத்துவமனையில் படுக்கை வசதிகள் இல்லாததால் நோயாளிகள் அவதி

author img

By

Published : May 4, 2021, 4:43 PM IST

சேலம் அரசு மருத்துவமனையில் படுக்கை வசதிகள் இல்லாததால் நோயாளிகள் அவதியடைந்துள்ளனர்.

படுக்கை வசதிகள் இல்லாததால் நோயாளிகள் அவதி

கரோனா இரண்டாம் அலை காட்டுத்தீ போல பரவி வருகிறது. சேலம் மாவட்டத்தில் நாள்தோறும் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று (மே.3) ஒரு நாள் மட்டும் 607 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள படுக்கைகள் அனைத்தும் நிரம்பின.

இதனால் கூடுதலாக வரும் கரோனா நோயாளிகளுக்கு ஆம்புலன்ஸ் வாகனத்தில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சேலம் அரசு மருத்துவமனையை பொறுத்தவரையில் கரோனா சிகிச்சை பிரிவில் 650 படுக்கை வசதிகள் உள்ளன. இதில் 500 படுக்கைகள் ஆக்சிஜன் வசதி கொண்டவை. இன்று (மே.4) புதியதாக 150 படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளதாக சேலம் அரசு மருத்துவமனை முதல்வர் முருகேசன் தெரிவித்துள்ளார்.

படுக்கை வசதிகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணத்தால், அங்கு கரோனா நோயாளிகளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தனியார் மருத்துவமனைகளில் இருந்து கரோனா நோயாளிகள் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

அவ்வாறு அதிகபட்ச மூச்சுத்திணறலோடு வரும் நேயாளிகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சேலம் அரசு மருத்துவமனையில் இட பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. 3 முகவர்கள் மூலமாக ஆக்சிஜன் சிலிண்டர்கள் சேலம் தனியார் மருத்துவமனைகளுக்கு விநியோகம் செய்யப்படுகின்றன. கடந்த சில நாட்களாக போதிய அளவு ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்படவில்லை எனத் தெரிகிறது. தட்டுப்பாடு காரணமாக ஆக்சிஜன் சிலிண்டர் கூடுதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

உடனடியாக மாவட்ட நிர்வாகம் ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு, போதிய படுக்கை வசதிகள் ஆகியவற்றை ஏற்பாடு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .

இதையும் படிங்க: ரெம்டெசிவர் மருந்து ஏற்றுமதிக்கு தடை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.