ETV Bharat / city

சர்வதேச போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற வீராங்கனை அரசுக்கு விடுத்த கோரிக்கை

சேலம் :சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களை அரசு நிதியுதவி செய்து ஊக்குவித்தால் சர்வதேச அரங்கில் அவர்கள் ஜொலிக்க முடியும் என ஏரோபிக்ஸ் வீராங்கனை சுப்ரஜா அரசுக்கு கோரிக்கைவிடுத்துள்ளார்.

supraja
author img

By

Published : Nov 7, 2019, 11:21 PM IST

சேலம் மாவட்டம் பெரியப்புதூர் பகுதியில் வசித்துவரும் பெருமாள் - பார்வதி தம்பதியினரின் மகள் சுப்ரஜா. கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. முதல் ஆண்டு படித்து வரும் இவர், ஏரோபிக்ஸ் விளையாட்டில் சர்வதேச அளவிலான போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார்.

சுப்ரஜா வென்ற பதக்கங்கள்

தந்தை ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்துவரும் நிலையில், 17 வயதான சுப்ரஜா சிறுவயதிலிருந்தே கராத்தே, யோகா, ஏரோபிக்ஸ், பிட்நஸ், கூடைப்பந்து ஆகிய விளையாட்டுகளில் சிறந்த வீராங்கனையாக விளங்கி வருகிறார். தான் பங்கேற்கும் போட்டிகளுக்கான செலவுகளுக்குத் தந்தையின் வருவாய் போதுமானதாக இல்லை என்று தெரிவிக்கும் சுப்ரஜா, இதுவரை பங்கேற்ற போட்டிகளுக்குப் பணம் திரட்ட தனது தந்தை கடுமையாக சிரமப்பட்டதாகக் கூறுகிறார்.

சுப்ரஜா தந்தை கண்ட சிரமம்

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற சர்வதேச ஏரோபிக்ஸ் போட்டியில் பங்கேற்குமாறு சுப்ரஜாவுக்கு அழைப்பு வரவே, அதற்கான பணத்தேவையைப் பூர்த்தி செய்ய அரசின் உதவியை அவர் நாடியுள்ளார். அங்கிருந்து சரியான உதவி கிடைக்காத நிலையில் தொழிலதிபர்கள், மருத்துவர்கள் சிலரின் உதவியுடன் போட்டியில் பங்கேற்று வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார் சுப்ரஜா.

பயணத்துக்கு உதவிய நபர்கள்

இந்த வெற்றியின் மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ள சுப்ரஜா, மேலும் பல சர்வதேச போட்டிகளில் பங்கேற்று ஒலிம்பிக்ஸ் போட்டியில் வெற்றி பெறுவதே தனது லட்சியம் என்கிறார். அரசின் உதவி கிடைக்கும் பட்சத்தில் தனது கனவை நனவாக்கி தேசத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்ப்பேன் என்று அவர் ஊக்கத்துடன் சொல்கிறார்.

அரசுக்கு கோரிக்கை வைக்கும் சுப்ரஜா

இதையும் படிங்க: கிரிக்கெட் மைதானங்களாகும் மதுரைக் கண்மாய்கள்!

Intro:சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க அரசு நிதி உதவி செய்ய வேண்டுமென, தனியார் நிதி உதவியுடன் சர்வதேச ஏரோபிக்ஸ் விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் பெற்ற மாணவி வலியுறுத்தல்.Body:
மத்திய, மாநில அரசுகள் நிதி உதவி அளித்தால் , சர்வதேச அளவில் இந்திய வீரர்கள் அதிக அளவில் பதக்கங்களை பெறுவார்கள் என வீராங்கனை நம்பிக்கை......

சேலம் மாநகர் பெரியப்புதூர் பகுதியில் வசிப்பவர் பெருமாள். இவருடைய மனைவி பார்வதி. ஆட்டோ ஓட்டுநரான பெருமாளின் மகள் சுப்ரஜா ஏரோபிக்ஸ் விளையாட்டு வீராங்கனை ஆவார்.
17 வயதான சுப்ரஜா சிறுவயதிலிருந்தே கராத்தே, யோகா, ஏரோபிக்ஸ்,பிட்நஸ், கூடைப்பந்து ஆகிய விளையாட்டுகளில் சிறந்த வீராங்கனையாக விளங்கி வருகிறார். ஏரோபிக்ஸ் விளையாட்டில் சர்வதேச வீரராகவும் திகழ்ந்து வரும் சுப்ரஜா, தற்போது கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. முதல் ஆண்டு படித்து வருகிறார். இந்தநிலையில் கடந்த நவம்பர் ஒன்றாம் தேதி முதல் நான்காம் தேதி வரை ரஷ்யாவில் உள்ள மாஸ்கோவில் சர்வதேச அளவிலான ஏரோபிக்ஸ் மற்றும் ஃபிட்னஸ் போட்டி நடைபெற்றது . இந்த போட்டியில் பங்கேற்க சுப்ரஜா அவருக்கு அழைப்பு வந்ததை அடுத்து அவர் பலரிடம் நிதியுதவி கோரினார். குறிப்பாக ரஷ்யாவில் உள்ள மாஸ்கோ சென்று வர சுமார் இரண்டு லட்ச ரூபாய் வரை செலவாகும் என்ற நிலையில், ஆட்டோ ஓட்டுநரான தந்தை பெருமாள், மகளை ரஷ்யாவிற்கு அனுப்ப கடும் சிரமப்பட்டார். முதல்வரை சந்தித்து மனு கொடுத்துள்ளார். ஆனால் அரசு சார்பில் அதிகாரிகள் சார்பில் இவர்களுக்கு எந்த நிதி உதவியும் கிடைக்கவில்லை. இதனையடுத்து ஆட்டோ ஓட்டுநர் பெருமாளின் வேண்டுகோளை ஏற்று மருத்துவர்கள், தொழிலதிபர்கள் ஆகியோர் அளித்த நிதி உதவியின் பேரில் சுப்ரஜா மாஸ்கோவில் நடந்த போட்டியில் கலந்துகொண்டார். இந்தப்போட்டியில் இந்தியா சார்பில் எட்டு மாணவிகள் பங்கேற்றனர். குறிப்பாக தமிழகம் சார்பில் மாணவி சுப்ரஜா மட்டுமே
பங்கேற்றார். இவர் மாஸ்கோவில் நடந்த தனி நபர்களுக்கான ஏரோபிக்ஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். ரஷ்ய மாணவி தங்கப்பதக்கம் பெற்றுள்ளார்.
இந்நிலையில் வெள்ளிப் பதக்கம் பெற்ற சுப்ரஜா விற்கு சேலத்தில் உள்ள தனியார் பள்ளி சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. அதில் மாணவ-மாணவிகள் சுப்ரஜா அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்ததோடு, தங்களது பாராட்டுக்களை தெரிவித்துக் கொண்டனர். இதனையடுத்து ஏரோபிக்ஸ் வீராங்கனை சுப்ரஜா கூறும்பொழுது, நான் சிறு வயதிலிருந்தே விளையாட்டில் ஆர்வம் உடையவர் . கூடைப்பந்து, கராத்தே, ஏரோபிக்ஸ் உள்ளிட்ட போட்டிகளில் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் தேர்வாகி பங்கேற்று, பல பரிசுகளை வென்றுள்ளேன். குறிப்பாக ஏரோபிக்ஸ் விளையாட்டில் கடந்த 2014 ஆம் ஆண்டு மாஸ்கோவில் நடந்த சர்வதேச ஏரோபிக்ஸ் விளையாட்டு போட்டியில் பங்கேற்று வெள்ளிப்பதக்கம் வென்றேன். அப்போதும் அரசு சார்பில் நிதியுதவி கிடைக்காததால், தன் தந்தை ஆட்டோவை அடமானம் வைத்து பணம் கொடுத்ததின் பேரில் ரஷ்யா சென்று வந்தேன். அதேபோல தற்போது கடந்த வாரம் மாஸ்கோவில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்க இரண்டு லட்ச ரூபாய் வரை செலவாகும் என்ற நிலையில், அரசோ, அதிகாரிகளோ நிதி உதவி வழங்கவில்லை. இதன் காரணமாக சேலத்திலுள்ள மருத்துவர்கள் மற்றும் தொழிலதிபர்கள் சிலர் நிதியுதவியுடன் மாஸ்கோ சென்று வந்தேன். தற்போதும் வெள்ளிப் பதக்கம் வென்றேன். என்னைப் போன்ற விளையாட்டு வீராங்கனைகள், வீரர்கள் பணமில்லாத காரணத்தினால் சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே மத்திய, மாநில அரசுகள் நிதி உதவி வழங்கி வீரர்-வீராங்கனைகளை ஊக்குவித்தால், இந்திய வீரர்கள் மேலும் பல பதக்கங்களை பெற முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.
சுப்ரஜா வின் தந்தை ஆட்டோ ஓட்டுநரான பெருமாள் கூறும்பொழுது சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகள் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க பணம் தேவைப்படுகிறது. ஆனால் அரசு சார்பில் நிதி உதவி இல்லாததால் மற்றவர்வர்களின் உதவியை நாட வேண்டியுள்ளது. எனவே மத்திய, மாநில அரசுகள் வீரர் வீராங்கனைகளை ஊக்குவிக்கவும், விளையாட்டு துறையை மேம்படுத்தவும் தனியாக நிதி ஒதுக்கவேண்டும் வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

பேட்டி-
வீராங்கனை சுப்ரஜா -

visual send mojo Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.