சேலம்: ஏற்காடு தொகுதிக்குட்பட்ட புளியங்கடை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அடிப்படை வசதிகள் இல்லாமல் இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதனடிப்படையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, புளியங்கடைக்கு நேரில் சென்று பள்ளியில் இன்று (ஜூலை 30) திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இதையடுத்து மாணவர்களிடம் வசதிகள் குறித்து கேட்டறிந்தார். அதோடு புளியங்கடை ஊர் மக்களிடம் கலந்துரையாடினார். இறுதியாக புளியங்கடை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகள் உடனடியாக நிறைவேற்றித் தரப்படும். இதற்காக பள்ளி சீரமைப்பு குறித்து, மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைப்பு? வரும் 1ஆம் தேதி ஆலோசனை