சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர்கள் சண்முகம்-திவ்யா தம்பதி. இவர்களுக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது. சண்முகம் அப்பகுதியில் உள்ள ஆலை ஒன்றில் காவலாளியாக பணிபுரிந்துவந்தார்.
இந்த நிலையில் சண்முகம் தனது ராசியின்படி நேரம் சரியில்லை என நள்ளிரவு பூஜைக்கு ஏற்பாடு செய்தார்.
அதன்படி ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணிக்கு ஒருவரை வீட்டிற்கு அழைத்து வந்து பூஜையைத் தொடங்கினார். பூஜைக்கு அவரது மனைவியை அழைத்து வருமாறு அர்ச்சகர் கூறவே, அவரும் மனைவி திவ்யாவை அழைத்தார். ஆனால் திவ்யா வர மறுத்துள்ளார்.
பின்னர் பூஜை முடித்த பின்பு இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆந்திரமடைந்த சண்முகம், திவ்யாவை சரமாரியாக தாக்கினார். அடுத்த நாள் காலை திவ்யாவின் சகோதரி அவரைப் பார்க்க வந்தபோது ரத்த காயங்களுடன் கிடந்தார்.
பின்னர் உடனடியாக ஆம்புலன்ஸை வரவழைத்து அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். தற்போது அங்கு திவ்யாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. மேலும் இதுதொடர்பாக சண்முகம் மற்றும் பூசாரியை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: விவசாயி மீது டிராக்டர் ஏற்றிக் கொலை!