ETV Bharat / city

சரக்கு லாரி கவிழ்ந்து விபத்து, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் மாணவ மாணவிகள் அவதி!

சேலம்:கந்தம்பட்டி பைபாஸ் பகுதியில் லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் இரண்டு மணி நேரமாக போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது.

சரக்கு லாரி கவிழ்ந்து விபத்து
author img

By

Published : Sep 24, 2019, 6:31 PM IST

சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையிலுள்ள கந்தம்பட்டி பைபாஸ் பகுதியில் சரக்கு லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் அங்கு இரண்டு மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் கல்லூரிக்குச் சென்றுவரும் மாணவ மாணவிகள் அவதிக்குள்ளாகினர்.

சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் அவ்வப்போது ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நெடுஞ்சாலைத்துறை சார்பில் அப்பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஹரியானாவிலிருந்து டன் கணக்கில் பார்சல் பொருட்களை ஏற்றிக்கொண்டு சரக்கு லாரி ஒன்று சேலம் நோக்கி வந்துள்ளது.

சரக்கு லாரி கவிழ்ந்து விபத்து

லாரி வேகமாக வந்து கொண்டிருந்தபோது மேம்பால தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இருந்தாலும் விபத்தின் காரணமாக நெடுஞ்சாலையில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இரண்டு கிலோ மீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் பள்ளி, கல்லூரிக்கு சென்றுவரும் மாணவ மாணவிகள், குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகினர். இதையடுத்து விபத்துக்குள்ளான கண்டெய்னர் லாரியை காவல்துறையினர் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

Intro:சேலம் கந்தம்பட்டி பைபாஸ் பகுதியில் லாரி கவிழ்ந்து விபத்து.

சேலம் டு கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கந்தம்பட்டி பைபாஸ் பகுதியில் சரக்கு லாரி கவிழ்ந்து விபத்து இரண்டு மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு.

Body:சேலம் கோவை தேசிய நெடுஞ்சாலையில் கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்ற கல்லூரி மாணவ மாணவிகள் அவதிக்குள்ளாகினர்.

சேலம் டு கோவை தேசிய நெடுஞ்சாலையில் கந்தம்பட்டி பகுதியில் அவ்வப்போது ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நெடுஞ்சாலைத்துறை சார்பில் அப்பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் ஹரியானாவில் இருந்து டன் கணக்கில் பார்சல் பொருட்களை ஏற்றிக்கொண்டு கண்டைனர் லாரி ஒன்று சேலம் நோக்கி வந்துள்ளது. அப்பொழுது கந்தம்பட்டி பகுதியில் லாரி வேகமாக வந்து கொண்டிருந்தபோது மேம்பாலத்தில் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்பட வில்லை இருந்தாலும் விபத்தின் காரணமாக சேலம் கோவை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது இரண்டு கிலோ மீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன இதனால் பள்ளி கல்லூரிக்கு செல்ல கூடிய மாணவ மாணவிகள் குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகினர். இதையடுத்து விபத்துக்குள்ளான கண்டெய்னர் லாரியை காவல்துறையினர் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.