சேலம்: அயோத்தியபட்டணம் அருகே சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று நள்ளிரவு ஆவின் லாரி ஓட்டுநர் பழனி வேல்முருகன் என்பவர் லாரியை நிறுத்தி ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்.
அப்பொழுது அவ்வழியாக வந்த இரண்டு இளைஞர்கள் லாரி ஓட்டுநர் பழனிவேல் முருகனை மிரட்டி கத்தியால் குத்தி அவரிடமிருந்த ரூ.20,000 மற்றும் செல்போனை பறித்துச் சென்றனர் .
மருத்துவமனையில் அனுமதி
ஓட்டுநரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் காரிப்பட்டி காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காரிப்பட்டி காவல்துறையினர் பழனிவேல் முருகனை மீட்டு சிகிச்சைக்காகச் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .
விசாரணை
ஓட்டுநர் பழனிவேல் முருகனின் புகாரின் பெயரில் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்களைக் காவலர்கள் வலைவீசித் தேடி வருகின்றனர். இது பற்றி அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: Tamilnadu Police Dare operation: தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி பினு சென்னையில் கைது