ETV Bharat / city

மனைவியை கொலை செய்த வழக்கு - லாரி ஓட்டுநருக்கு ஆயுள் தண்டனை

மனைவியை கொலை செய்துவிட்டு, தற்கொலை செய்து கொண்டதாக கூறிய லாரி ஓட்டுநருக்கு மகிளா நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

Murder case
Murder case
author img

By

Published : Jan 23, 2021, 8:21 AM IST

சேலம் மாவட்டம் கருப்பூர் அடுத்த மூங்கில்பாடியைச் சேர்ந்தவர்கள் கணேசன் - விஜயா தம்பதி. இவர்கள் மகள் சசிகலாவை, விஜயாவின் சகோதரரும் லாரி ஓட்டுநருமான சரவணனுக்கு சில ஆண்டுகளுக்கு திருமணம் செய்து வைத்தனர்.

இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். மதுப்பழக்கம் உள்ள சரவணன், தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்து வந்திருக்கிறார். இதுதொடர்பாக பலமுறை சசிகலா பெற்றோரிடம் புகார் தெரிவித்தார். அவர்களும் சமாதானப் படுத்தி வந்தனர்.

இந்த நிலையில், கடந்த 2016ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி தனது மகள் சசிகலா தற்கொலை செய்து கொண்டதாக சூரமங்கலம் காவல் நிலையத்தில் விஜயா புகார் மனு ஒன்றை அளித்தார்.

அதன் பேரில், சூரமங்கலம் காவல்நிலையத்தின் அப்போதைய ஆய்வாளர் மணிவர்மன், சிறப்பு உதவி ஆய்வாளர் பிரபாகரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதே நேரத்தில், சமர்ப்பிக்கப்பட்ட உடற்கூராய்வு அறிக்கையில், சசிகலா கொலை செய்யப்பட்டார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

விசாரணையில் தனது மனைவியை சரவணன் அடித்துக் கொலை செய்துவிட்டு, அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணை மகிளா நீதிமன்றத்தில் நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி ராமஜெயம், மனைவியை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய சரவணனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும், சரவணன் தடயத்தை (தூக்கு கயிற்றை) மறைத்து வைத்த குற்றத்திற்காக, மூன்று ஆண்டு சிறை தண்டனையும், ரூ 10,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட சசிகலாவின் தந்தை கணேசன் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அதன் காரணமாக அவரது பெயர் வழக்கில் இருந்து நீக்கம் செய்யப்பட்டது.

இதையும் படிங்க: விவசாயிகளை மூன்று மணி நேரம் காத்திருக்க வைத்த அமைச்சர்...பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.