ETV Bharat / city

நீர் ஆற்றல் திட்டத்தின் மூலம் 3000 மரக்கன்றுகள் நடும் விழா! - Karuppur

சேலம்: கருப்பூரில் சிறு வனத்தை உருவாக்கும் முயற்சியாக ஜல்சக்தி அபியான் எனப்படும் நீர் ஆற்றல் திட்டத்தின் மூலம் 3000 மரக்கன்றுகள் நடப்பட்டு பேரூராட்சி சார்பில் பராமரிப்பு செய்யப்பட்டுவருகிறது.

jal-sakthi-abhiyan-tree-planting-fest
author img

By

Published : Oct 7, 2019, 9:38 AM IST

சேலம் மாவட்டம் கருப்பூரில் ஜல்சக்தி அபியான் திட்டத்தின் மூலம் ஒரே நாளில் மூன்றாயிரம் மரக்கன்றுகள் நடும் விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் ஓமலூர் சட்டப்பேரவை உறுப்பினர் வெற்றிவேல் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு மரம்நடும் பணிகளைத் தொடங்கிவைத்தார்.

இதையடுத்து கருப்பூர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பலரும் இவ்விழாவில் கலந்துகொண்டு மரக்கன்றுகளை ஆர்வமுடன் நட்டனர். மேலும், அங்குள்ள குன்று பகுதியிலும் பலவகை மரக்கன்றுகள் நடப்பட்டன.

இதையடுத்து பேரூராட்சி பகுதிகளில் உள்ள பூங்கா, மருத்துவமனை, பள்ளி, கல்லூரி என காலியாக உள்ள அனைத்து இடங்களிலும் அதிக எண்ணிக்கையில் மரக்கன்றுகளை நட வேண்டும் என்று பேரூராட்சி இயக்குநர் உத்தரவிட்டார்.

3000 மரக்கன்றுகள் நடும் விழா

இதைத் தொடர்ந்து கருப்பூரில் உள்ள அனைத்து இடங்களிலும் மக்கள் பங்களிப்புடன் மரக்கன்றுகள் நடப்படும் என்றும் நடப்பட்ட மரக்கன்றுகள் பட்டுப்போகாமல் பாதுகாக்கவும் பட்டுப்போகும் மரக்கன்றுகளை அகற்றிவிட்டு அந்த இடத்தில் மீண்டும் புதிய மரக்கன்றுகள் நடப்படும் என்றும் பேரூராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: Iraq Protests: சீர்திருத்தங்களை அறிவித்தார் பிரதமர் அப்துல் மஹ்தி!

Intro:சேலம் அடுத்த கருப்பூரில் சிறு வனத்தை உருவாக்கும் முயற்சியாக 3000 மரக்கன்றுகள் நடப்பட்டு பேரூராட்சி சார்பில் பராமரிப்பு செய்யப்பட்டு வருகிறது.
Body:
சேலம் மாவட்டம்
கருப்பூர் பேரூராட்சியில் உள்ள ஏரிகளிலும், குன்றுகளிலும் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது. கருப்பூர் ஏரியில் ஏற்கனவே பொதுமக்களின் ஒத்துழைப்புடன் சுமார் ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டது.

அதில், வேம்பு, மஞ்சகடம்பை, பலா, அத்தி, நாவல் போன்ற நிழல் மட்டும் பழம் தரும் மரங்களும் நடப்பட்டு இருந்தது. அந்த மரங்கள் தற்போது ஓரளவிற்கு அந்த மரங்கள் வளர்ந்து விட்டன. இந்தநிலையில்ஜல் சக்தி அபியான் திட்டத்தின் மூலம் ஒரே நாளில் 3000 மரக்கன்றுகள் நாடும் விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் ஓமலூர் சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு பணிகளை துவக்கி வைத்தார். இதையடுத்து கருப்பூர் ஏரியில் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டு மரக்கன்றுகளை ஆர்வமுடன் நட்டனர். மேலும், அங்குள்ள குன்று பகுதியிலும் பலவகை மரக்கன்றுகளும் நடப்பட்டது.பேரூராட்சி பகுதிகளில் உள்ள பூங்கா, மருத்துவமனை, பள்ளி, கல்லூரி மற்றும் காலியாக உள்ள அனைத்து இடங்களிலும் அதிக எண்ணிகையில் மரக்கன்றுகளை நடவேண்டும் என்று பேரூராட்சிகள் இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவை முழுமையாக அமல்படுத்தும் வகையில் காந்தி பிறந்தநாளில் மரக்கன்று நாடும் பணிகள் துவங்கியது. இதனை தொடர்ந்து இன்று மெகா மரக்கன்று நடும் நிகழ்வு நடைபெற்றது.

Conclusion:
தொடர்ந்து கருப்பூர் பேரூராட்சியில் உள்ள அனைத்து இடங்களிலும் மக்கள் பங்களிப்புடன் மரக்கன்றுகள் நடப்படும் என்றும் நடப்பட்ட மரக்கன்றுகள் பட்டுபோகாமல் பாதுகாக்கவும், பட்டுபோகும் மரக்கன்றுகளை அகற்றிவிட்டு அந்த இடத்தில் மீண்டும் புதிய மரக்கன்றுகள் நடப்படும் என்றும் பேரூராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.