ETV Bharat / city

பட்டயக் கணக்காளர் தேர்வில் முதலிடம் பிடித்த சேலம் மாணவர்! - CA Topper Isaikkiraj

சேலம்: அகில இந்திய பட்டயக் கணக்காளர் தேர்வில் சேலம் மாணவர் இசக்கி ராஜ் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார்.

பட்டயக் கணக்காளர்
பட்டயக் கணக்காளர்
author img

By

Published : Feb 2, 2021, 10:20 AM IST

அகில இந்திய பட்டயக் கணக்காளர் தேர்வு கடந்த 2020 நவம்பர் மாதம் நடைபெற்றது. இத்தேர்வு முடிவுகள் நேற்று (பிப். 01) வெளியானது.

இதில் சேலம் கன்னங்குறிச்சியைச் சேர்ந்த ஏ. இசக்கிராஜ், அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்துப் பெருமைசேர்த்துள்ளார்.

பட்டயக் கணக்காளர் தேர்வில் சேலம் மாணவர் முதலிடம் பிடித்து சாதனை
சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் தனியார் நிறுவன ஊழியர். இவரின் மனைவி கோமதி. இத்தம்பதியின் மகன் ஏ. இசக்கிராஜ், பட்டயக் கணக்காளர் தேர்வில், 800 மதிப்பெண்களுக்கு 553 மதிப்பெண்கள் (69.13%) பெற்று அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்து சிறப்பு சேர்த்துள்ளார்.
இவர் தனது முதல் முயற்சியிலேயே அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சேலத்தைச் சேர்ந்த ஆடிட்டர் செந்தில் என்பவரிடம் பயிற்சிபெற்றவர். இதுதொடர்பாக ஏ. இசக்கிராஜ் அளித்த பிரத்யேக பேட்டியில், "நான் 10ஆம் வகுப்பு படிக்கும்போது, எனது தந்தை பட்டயக் கணக்காளர் தேர்வு குறித்து என்னிடம் அறிமுகம் செய்து அதில் வெற்றி பெற வேண்டும் என்று கூறி ஆர்வத்தை வளர்த்தார்.
அவரின் ஆலோசனையின்பேரில் பிளஸ் 2 முடித்துவிட்டு, பட்டயக் கணக்காளராக வேண்டும் என 2014ஆம் ஆண்டுமுதல் தீவிரமாகப் படித்துவந்தேன். இதற்காக முதற்கட்ட தேர்வை முடித்துவிட்டு பயிற்சிப் பெற்றுவந்தேன். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பட்டயக் கணக்காளர் இறுதித் தேர்வுக்குப் பயிற்சி மையங்களில் சேர்ந்து படித்தேன்.
முதல் முயற்சியிலேயே அகில இந்திய அளவில் முதலிடம் பிடிப்பேன் என எதிர்பார்க்கவில்லை. அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கடின உழைப்பும், விடாமுயற்சியும் இருந்தால் தேர்வில் சாதிக்க முடியும். எனக்கு வழிகாட்டியாக இருந்த பெற்றோர், ஆசிரியர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.
2016ஆம் ஆண்டு ஏற்கெனவே சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் என்பவர் அதிக மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்து சிறப்பு சேர்த்தார். அந்தவகையில் தற்போது சேலத்தைச் சேர்ந்த ஏ. இசக்கிராஜ், அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.