ETV Bharat / city

அனுமதியின்றி இயங்கும் கல்குவாரி - விசாரணைக்கு உத்தரவு! - குப்பனூர் கத்திரிப் பட்டி

சேலம்: சேர்வராயன் மலையடிவாரத்தில் அரசு அனுமதியின்றி இயங்கி வரும் கல்குவாரி குறித்து, விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க வட்டாட்சியருக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோதமாக இயங்கிவரும் கல்குவாரி!
author img

By

Published : Jun 27, 2019, 9:37 AM IST

சேலம் மாவட்டத்தில் கனிம வளங்கள் நிறைந்த சேர்வராயன் மலையடிவாரப் பகுதிகளில் உள்ளன குப்பனூர், கத்திரிப்பட்டி ஆகிய கிராமங்கள். இக்கிராமங்களின் எல்லைப் பகுதியில், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கல்குவாரி ஒன்று அனுமதியின்றி இயங்கி வருகிறது. இதனால் இயற்கை வளங்கள் கொள்ளைபோவதுடன் பொதுமக்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு இம்மாவட்டத்தில், கல்குவாரி குட்டை நீரில் மூழ்கி கணவன் மனைவி உள்பட 3 உயிரிழந்தனர்.

குப்பனூர், கத்திரிப்பட்டி கிராமங்களில் இயங்கிவரும் கல்குவாரிகள் குறித்து 'அரசு அலுவலர்களின் உதவியோடு இயங்கும் கல் குவாரி' என கடந்த 21ஆம் தேதி செய்தி வெளியிட்டோம்.

இதனையடுத்து அப்பகுதியில் கல்குவாரி இயங்குகிறதா என்பதை நேரில் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க வேண்டுமென அப்பகுதி வட்டாட்சியருக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோதமாக இயங்கிவரும் கல்குவாரி!

இந்த நடவடிக்கை தொடர்பாக சேலம் மாவட்ட கனிமவளத்துறை அலுவலர்கள் கூறுகையில், "கத்திரிப்பட்டி, குப்பனூர் பகுதியில் தனியார் நிலத்தில் பத்து அடிக்கு மேல் குவாரி வெட்டி கனிம வளத்தை எடுத்துள்ளது தெரியவந்துள்ளது, வெட்டப்பட்ட குழியின் ஆழத்தை அளக்க இயலாத வகையில் மண் கொட்டி மூடியுள்ளனர். எனவே இது தொடர்பாக வருவாய்த்துறை அலுவலர்கள் உரிய விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது" என்றனர்.

Intro:சேர்வராயன் மலை அடிவாரத்தில் அரசு அனுமதியின்றி இயங்கி வந்த கல்குவாரி குறித்து, வட்டாட்சியர் விசாரித்து அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Body:கனிம வளங்கள் நிறைந்த சேலம் மாவட்டம் சேர்வராயன் மலை அடிவார பகுதியான குப்பனூர், கத்திரிப்பட்டி ஆகிய கிராமங்களின் எல்லைப் பகுதியில் அனுமதியின்றி கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக கல்குவாரி ஒன்று இயங்கி வருகிறது.

இது தொடர்பாக அப்பகுதி மக்கள் நம்மிடம், புகார் தெரிவித்தனர். இதனை அடுத்து களத்தில் இறங்கிய நாம், குப்பனூர் மற்றும் கத்திரிப் பட்டி கிராமத்திற்கு நேரில் சென்று, பார்வையிட்டு, கல் குவாரி இயங்கி வந்ததை உறுதி செய்து செய்தி வெளியிட்டோம்.

இது தொடர்பான விரிவான செய்தி , அரசு அலுவலர்களின் உதவியோடு இயங்கி வரும் கல்குவாரி என்று கடந்த 21 ஆம் தேதி இ-டிவி பாரத்தில் வெளியாகியது.

செய்தி வெளியானதும் சேலம் மாவட்டம் நிர்வாகம் பரபரப்படைந்து உண்மையில் கல்குவாரி இயங்குகிறதா என்பதை நேரில் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க வேண்டும் என்று குப்பனூர், கத்திரிப் பட்டி பகுதி வட்டாட்சியருக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த நடவடிக்கை தொடர்பாக சேலம் மாவட்ட கனிம வளத்துறை அதிகாரிகள் கூறுகையில்," கத்திரிப்பட்டி, குப்பனூர் பகுதியில் தனியார் நிலத்தில் 10 அடிக்கு மேல் குவாரி வெட்டி கனிம வளத்தை எடுத்ததாக தெரியவந்துள்ளது. வெட்டப்பட்ட குழியின் ஆழத்தை அளக்க இயலாத வகையில் மண் கொட்டி மூடியுள்ளனர்.

இதுதொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தயாரித்து அளிக்க அந்தப் பகுதி வட்டாட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பெரிய அளவிலான கற்களை வெட்டி தனியார் ஒருவர் தனது நிலத்திற்கு கற்களால் வேலி அமைத்து இருக்கிறார் .

காட்டெருமை நிலத்திற்குள் நுழையாத வண்ணம் அந்த கற்களால் தடுப்பு அமைக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. ஆனால் பெரிய அளவிலான பாறைகளை உடைத்து அகற்ற விவசாயிகள் கனிமவளத்துறை இடம் உரிய அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

ஆனால் இந்த விஷயத்தைப் பொறுத்தவரை அவர் அனுமதி இல்லாமல் செயல்பட்டு இருக்கிறார் . எனவே அது தொடர்பாக வருவாய் அதிகாரிகள் உரிய விசாரணை செய்து விரைந்து அறிக்கை தயாரித்து ஆட்சியருக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்" என தெரிவித்தனர்.

Conclusion:வட்டாட்சியர் அறிக்கை அளித்த பின்னர், வனப் பகுதிக்குள் நுழைந்து அத்துமீறி கல்குவாரி அமைத்து கனிம வளத்தை கொள்ளையடிக்க தனியார் நில உரிமையாளர் மீதும் , அதற்கு உடந்தையாக இருந்த வருவாய்த்துறை அதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கை பாயும் என்று சேலம் மாவட்ட கனிமவளத் துறை அதிகாரிகள், மேலும் தெரிவித்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.