ETV Bharat / city

தனியார் மருத்துவமனைகளுக்கு ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை! - தனியார் மருத்துவமனை

சேலம்: கரோனோ சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தனியார் மருத்துவமனைகளுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

secretary
secretary
author img

By

Published : Dec 17, 2020, 1:47 PM IST

சேலத்தில் உள்ள அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று திடீரென ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனையின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்ற ராதாகிருஷ்ணன், பிரசவ வார்டு, தீவிர அறுவை சிகிச்சை பிரிவுகளில் இருந்த நோயாளிகளிடம், அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.

மேலும், கரோனா சிகிச்சை மையம், அதிநவீன தீவிர சிகிச்சைப் பிரிவு, மருந்துக் கிடங்கு, ஆய்வகம் உள்ளிட்டவற்றிற்கும் சென்று ஆய்வு செய்த அவர், தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசினார். ” தமிழகத்தில் கரோனோ பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. அரசு மருத்துவமனையில் 75 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் ஆயிரத்து நூறு பேருக்கு மட்டுமே தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதில் இறப்பு 1 சதவீதத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. அதேபோல் நோய்த்தொற்றும் 2 சதவீதமாக குறைந்துள்ளது. அதையும் ஜீரோவாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்தால் தொடர்புடைய தனியார் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கல்லூரி விடுதிகள், உணவு விடுதிகளில் 20 பேருக்கு மேல் குடியிருக்கக்கூடாது. அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். ஐஐடியில் தொற்று கண்டறியப்பட்டுள்ளதால் அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் 15 நாட்களுக்கு ஒரு முறை பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் “ என்றார்.

இந்த ஆய்வின்போது அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாலாஜி நாதன், மருத்துவக் கண்காணிப்பாளர் தனபால் மற்றும் துறைத் தலைவர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: அரசாணைகளை தமிழில் வெளியிடக்கோரி வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.