உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பெருந்தொற்றால் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதைத்தொடர்ந்து இந்தியாவில் இந்த வைரஸ் பெருந்தொற்று பரவாமல் இருக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகின்றன.
மக்கள் ஊரடங்கு காரணமாக அரசு பேருந்துகள் நேற்று (மார்ச் 22) ஒரு நாள் இயக்கப்படவில்லை. இன்று மீண்டும் வழக்கம்போல் போக்குவரத்து தொடங்கப்படவுள்ளது.
இதையடுத்து சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையில் நிறுத்தப்பட்டிருந்த நகரப் பேருந்து, விரைவு பேருந்து மற்றும் சிறப்பு பேருந்து உள்ளிட்ட 71 பேருந்துகளுக்கு சுகாதார துறையினர் கிருமி நாசினி தெளித்தனர்.
கரோனா குறித்த அச்சத்தை போக்கும் விதமாக அரசு எடுத்துள்ள இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பலரும் பாராட்டி வரும் நிலையில், அரசு பேருந்தைப் போல் தனியார் பேருந்துகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட வேண்டும் என்று கூறுகின்றனர்.
இதையும் படிங்க: மதுபோதையில் காவலர்களிடம் தகராறு செய்தவர் கைது!