ETV Bharat / city

மகளை சுத்தியால் அடித்துக் கொன்று தந்தை தற்கொலை! - The father who killed his daughter committed suicide

சேலம்: தன் மகளை சுத்தியால் அடித்து கொலை செய்து விட்டு, தந்தையும் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மகளைக் சுத்தியால் அடித்துக் கொன்ற தந்தை தற்கொலை  மகளைக் கொலை செய்த தந்தை தற்கொலை  மகளைக் கொலை செய்த தந்தை தற்கொலை  Father commits suicide by beating daughter to death in salem  The father who killed his daughter committed suicide  Salem suicide
Father commits suicide by beating daughter to death in salem
author img

By

Published : Feb 19, 2021, 10:19 PM IST

சேலம் மாவட்டம், எடப்பாடி அடுத்த தாதாபுரம் அருகேயுள்ள ஆதிகாட்டூரைச் சேர்ந்தவர் கோபால்(54), காய்கறி வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு மணி(50) என்ற மனைவியும், ரமேஷ் கண்ணன்(21) என்ற மகனும், பிரியா(15) என்கிற மகளும் உள்ளனர். பிரியா தாதாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.

மனைவி மணி ஈரோட்டில் கூலித் தொழில் செய்து வரும் நிலையில் கோபால் தனது மகன் மகளோடு சேலத்தில் வீட்டில் வசித்து வந்தார். நேற்று (பிப்.18) இரவு மகன் ரமேஷ் கண்ணன் பாட்டி வீட்டிற்குச் சென்று விட்டதால், வீட்டில் கோபாலும் பிரியாவும் மட்டுமே இருந்துள்ளனர்.

இந்நிலையில், இன்று (பிப்.19) அதிகாலை 4 மணி அளவில் தனது தம்பி சுகந்திரன் வீட்டிற்குச் சென்ற கோபால், 'நான் பிரியாவை சுத்தியால் அடித்து கொலை செய்து விட்டேன்' என்று கூறியுள்ளார். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சுகந்திரன் அண்ணன் வீட்டிற்து சென்று பார்த்த போது, அங்கு ரத்த வெள்ளத்தில் பிரியா இறந்து கிடந்ததைக் கண்டு கதறி அழுது உள்ளார்.

அதைப் பார்த்துக் கொண்டிருந்த கோபால் திடீரென வீட்டின் மாடி மீது ஏறி கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதனைக் கண்டு அதிர்ந்து போன சுகந்திரன், உறவினர்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் ஆய்வாளர் செந்தில் தலைமையிலான காவலர்கள் இருவரது உடல்களையும் மீட்டு உடற்கூராய்விற்காக எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் கொலை, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகளைக் கொன்று, தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பைக் மீது கார் மோதிய விபத்தில் தந்தை மகள் படுகாயம்: கொலை சதியா என போலீஸ் விசாரணை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.