தெலங்கானா மாநில போக்குவரத்து ஊழியர்கள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 20 நாட்களாக போராடி வருகின்றனர். இதனால், அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகரராவ், போராட்டத்தில் ஈடுபட்ட அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் 48 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இது அம்மாநிலத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதை கண்டித்து சேலம் நாட்டாண்மை கழக கட்டடம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், தெலங்கானா அரசால் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களை மீண்டும் பணியில் சேர்க்க வலியுறுத்தியும், அவர்களுக்கு உரிய கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதையும் படியுங்க:
'போராட்டம் தொடரும்' - தெலங்கானா போக்குவரத்து ஊழியர்கள் அறிவிப்பு!