இன்று (அக்.25) ஆயுத பூஜை, நாளை (அக்.26) விஜயதசமி கொண்டாடப்படுகிறது. இயல்பாகவே, ஆயுத பூஜை நாளில் மாவட்டங்களில் உள்ள உழவர் சந்தைகளில் கூட்டம் அதிகமாகக் காணப்படும். அத்துடன் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், இயல்பைக் காட்டிலும் கூடுதலாக மக்கள் கூட்டம் காணப்படுகிறது.
சேலத்தில் உள்ள உழவர் சந்தைகளில் அதிகாலை முதலே பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது. கரோனா ஊரடங்கில் பண்டிகை காலங்களில் மக்கள் கவனமுடனும், பாதுகாப்புடன் கொண்டாட வேண்டும் என தமிழ்நாடு அரசு அறிவுறுத்தி உள்ளது.
ஆனால் மக்கள் அலட்சியமாக சமூக இடைவெளியின்றி கூட்டமாக சந்தைகளில் திரண்டதால் கரோனா தொற்று மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆயுத பூஜை: வரத்து குறைவு காரணமாக பூ விலை கடும் உயர்வு