தருமபுரி : தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த இரு மாதங்களாக குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
சுற்றுலாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், ஒகேனக்கல் செல்லும் சுற்றுலா பயணிகளை, பென்னாகரம் மடம் பகுதியிலேயே போலீசார் திருப்பி அனுப்பி வருகின்றனர்.
ஆனால் சிலர் போலீசாரிடம் பொய்யான காரணங்களை கூறி விட்டு ஒகேனக்கல் பகுதிக்கு செல்கின்றனர். சினிஅருவி அருகே எண்ணெய் மசாஜ் செய்து, மெயின் அருவியில் ஆனந்த குளியல் போடும் அவர்கள், பரிசல் பயணம் மேற்கொள்கின்றனர்.
இதையும் படிங்க : வடமாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு