ETV Bharat / city

காந்தியை சுட்டுக்கொன்ற வழக்கில் கைதான சாவர்க்கருக்கு பாரத ரத்னாவா? பிரகாஷ் காரத் - கம்யூனிஸ்ட் கட்சி விழா

சேலம்: அண்ணல் காந்தியின் 150ஆவது பிறந்தநாளை கொண்டாடும் மத்திய அரசு, அதே காந்தியை சுட்டுக்கொன்ற வழக்கில் கைதான சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது கொடுக்க முயல்வதாக, பிரகாஷ் காரத் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பிரகாஷ் காரத்
author img

By

Published : Oct 22, 2019, 12:57 AM IST

சேலத்தில் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகம் முன்பு கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாவது ஆண்டு விழா இன்று நடைபெற்றது. இதையொட்டி கட்சி அலுவலகம் முன்பு அமைக்கப்பட்டிருந்த தத்துவமேதை கார்ல் மார்க்ஸ் சிலையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் திறந்து வைத்தார். இந்த விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.

சேலத்தில் திறக்கப்பட்ட கார்ல் மார்க்ஸ் சிலை
சேலத்தில் திறக்கப்பட்ட கார்ல் மார்க்ஸ் சிலை

பின்னர் பொதுக்கூட்ட மேடையில் பிரகாஷ்காரத் பேசுகையில்," இந்தியாவை தற்போது ஆர் எஸ் எஸ் இயக்கம்தான் ஆட்சி செய்து வருகிறது . மோடி அரசு இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற நாளிலிருந்து இந்தியாவின் அரசியல் சாசன சட்டத்தை நீர்த்துப்போகும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு சட்டத்தை நீக்கிய மத்திய அரசு, அம்மாநில மக்கள் சுதந்திரமாக செயல்பட முடியாத சூழலை உருவாக்கியுள்ளது.

கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ் காரத்

பிரதமர் மோடியும், அமித் ஷாவும் மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகின்ற நிலையில், அதே காந்தியை சுட்டுக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கூறுகிறார்கள். இதன்மூலம் இந்திய ஜனநாயகத்தை நெறிக்கும் செயலில் பாஜக அரசு ஈடுபட்டு வருவது தெளிவாகிறது. சுதந்திரப் போராட்ட காலத்தில் இந்திய விடுதலைக்கு பாடுபடாமல் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு ஆதரவாக செயல்பட்ட ஆர்எஸ்எஸ் இயக்கம் தற்போது முன்னிலை பெற்றுள்ளது. இது இந்தியாவின் நலனுக்கு உகந்தது அல்ல" என்றார்.

சில நாட்களுக்கு முன்னதாக அமித் ஷா, சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என பேசியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: உலகத்தின் முதல் சோசலிச ஜனநாயகவாதி நேரு!

Intro:மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான அரசு இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற திலிருந்து இந்திய அரசியல் சாசனத்தை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் செயல்படுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

Body:சேலத்தில் இன்று மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாவது ஆண்டு விழா நடைபெற்றது.

இதனை ஒட்டி கட்சி அலுவலகம் முன்பு அமைக்கப்பட்டிருந்த தத்துவமேதை கார்ல் மார்க்ஸ் சிலையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் திறந்து வைத்தார்.

பின்னர் பொதுக்கூட்ட மேடையில் பேசிய பிரகாஷ்காரத்," இந்தியாவை தற்போது ஆர் எஸ் எஸ் இயக்கம்தான் ஆட்சி செய்து வருகிறது .

மோடி அரசு இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற திலிருந்து இந்தியாவின் அரசியல் சாசன சட்டத்தை நீர்த்துப்போகும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் மாநில அந்தஸ்தை அளித்துள்ள மத்திய அரசு அம்மாநில மக்கள் சுதந்திரமாக செயல்பட முடியாத சூழலை உருவாக்கி உள்ளது .

பிரதமர் மோடியும் அமித் ஷாவும் மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாளை கொண்டாடி வருகின்ற நிலையில் அவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.

இதன்மூலம் இந்திய ஜனநாயகத்தை நெறிக்கும் செயலில் பாஜக அரசு ஈடுபட்டுள்ளது தெளிவாகிறது. மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையினால் இந்தியாவில் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளது .

ஆட்டோ மொபைல் தொழில் தொடங்கி அனைத்து தொழில்களிலும் இது எதிரொலிக்கிறது .

சுதந்திர போராட்ட காலத்தில் இந்திய விடுதலைக்கு பாடுபடாமல் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு ஆதரவாக செயல்பட்ட ஆர்எஸ்எஸ் இயக்கம் தற்போது முன்னிலை பெற்றுள்ளது. இந்தியாவின் நலனுக்கு உகந்தது அல்ல" என்று தெரிவித்தார்.

Conclusion:இந்த விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், சேலம் மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி உள்ளிட்ட முக்கிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரதிநிதிகள் உறுப்பினர்கள் திரளாக் கலந்து கொண்டனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.