ETV Bharat / city

கல்லூரி மாணவிகளுக்கு வாக்காளர் விழிப்புணர்வு விளக்க நிகழ்ச்சி! - ரோகிணி

சேலம்: மாவட்ட ஆட்சியர் ரோகிணி தலைமையில், கல்லூரி மாணவர்களுக்கு வாக்களர்களுக்கு விழிப்புணர் குறித்தான விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

slm
author img

By

Published : Mar 14, 2019, 11:16 PM IST

சேலத்தில் தனியார் கல்லூரி ஒன்றில் வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சி தலைவருமான ரோகிணி தலைமை தாங்கினார்.

பின்னர் அவர் நிகழ்ச்சி முடிந்து செய்தியாளர்களை சந்தித்தார். இதில், தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி சேலம் மாவட்டத்தில் இருக்கும் அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளில் அனைத்து பணிகளும் ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது என்றும் இளைய சமுதாயத்தினர் அனைவரும் வரும் ஏப்ரல் 18ம் தேதி கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்றும் கூறினார்.

Intro:சேலம் தனியார் கல்லூரியில் மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சி தலைவருமான ரோகிணி தலைமையில் கல்லூரி மாணவ மாணவியர் மத்தியில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

இதில் ரோகிணி , 100% வாக்களிப்பது குறித்து மாணவ மாணவியர் மத்தியில் விழிப்புணர்வு உரையாற்றி பேசினார். நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் இந்திய வரைபட வடிவில் நின்று தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Body:சேலம் தனியார் கல்லூரி வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியர் இளைய சமுதாயத்தினர் அனைவரும் வரும் ஏப்ரல் 18ம் தேதி கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

நிகழ்ச்சியின் முடிவில் ஊடகங்களுக்கு பேட்டியளித்த மாவட்ட ஆட்சியர் தேர்தல் அலுவலர் ரோகிணி கூறுகையில்," தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி சேலம் மாவட்டத்தில் இருக்கும் 11 சட்டமன்ற தொகுதிகளுக்கும் பாராளுமன்ற தேர்தல் 2019 காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது .

வாக்காளர் பங்களிப்பு 100% வாக்களிப்பது குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் தினமும் நடைபெற்று வருகிறது . குறிப்பாக 18 வயது நிரம்பிய இளைஞர்கள் வாக்களிப்பதில் ஆர்வத்துடன் செயல்படவும் கிராமப்புற இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் விழிப்புணர்வு சின்னம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இது வாக்குப்பதிவு இயந்திரத்தின் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் இளைஞர்கள் வாக்களிப்பதன் அவசியத்தை உணர்வார்கள்.

சேலம் மாவட்டத்தின் 11 சட்டமன்ற தொகுதிகளிலும் 33 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு தேர்தல் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் அச்சம் இல்லாமல் வாக்களிக்க மாவட்ட தேர்தல் அலுவலகம் சிறப்பான ஏற்பாடு செய்துள்ளது" என்று தெரிவித்தார்.

Conclusion:இந்த நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட உதவி ஆட்சியர் வந்தனா கார்க் , மாவட்ட பஞ்சாயத்து செயலர் விஜயகுமாரி, வாக்காளர் பதிவு அலுவலர் சரவணன் மற்றும் கல்லூரி மாணவ மாணவியர் ஏராளமானோர் கலந்து கொண்டனர் .
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.