தென் மாவட்டங்களில் கரோனா பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஆக.08) சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டி பயணியர் மாளிகை ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.
அக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ராமன், மாநகராட்சி ஆணையாளர் சதீஷ், சுகாதாரத் துறை இணை இயக்குநர் நிர்மல் சன், அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாலாஜி நாதன் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை, பொதுப்பணித் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
அதில், முதலமைச்சர் சேலம் மாவட்டத்தில் அரசு சார்பில் நடைபெற்றுவரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள், அவற்றின் தற்போதைய நிலை, புதிய திட்டங்கள் தொடக்கம் உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டு ஆய்வு செய்தார்.
பின்னர் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, " சேலம் மாவட்டத்தில் அரசு திட்டங்கள் அனைத்தும் வேகமாகவும், துரிதமாகவும் நடைபெற்றுவருகின்றன. அதில் குடிமராமத்து மற்றும் விவசாயத் திட்டப்பணிகள், மேட்டூர் அணை உபரி நீர் திட்டம் உள்ளிட்ட முக்கியப் பணிகளும் அடங்கும். அதேபோல் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க பல்வேறு பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ரூ.165.25 கோடி மதிப்புள்ள திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர்!