ETV Bharat / city

'ஆங்கில அறிவில்லாமல் இந்தியை வைத்துக்கொண்டு வெளிநாடுகளில் என்ன செய்யமுடியும்?' - பீட்டர் அல்போன்ஸ் தாக்கு! - திராவிட மாடல்

ஆங்கில அறிவு இல்லாமல், இந்தியை மட்டும் கற்றுக்கொண்டு வெளிநாடுகளில் பணியாற்ற இயலாது என்று மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.

பீட்டர் அல்போன்ஸ்
பீட்டர் அல்போன்ஸ்
author img

By

Published : Apr 9, 2022, 6:28 PM IST

சேலம் சூரமங்கலத்தில் அனைத்து கல்லூரிகளுக்கான பேச்சுப்போட்டி இன்று (ஏப்.9) நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கலந்து கொண்டார். இதைத்தொடர்ந்து மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், 'உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆங்கிலத்திற்குப் பதிலாக ஹிந்தி மொழியைத் திணிக்கும் நோக்கில் பேசி வருகிறார். இது இந்தி பேசாத, மற்ற மாநில மக்களை கடுமையாகப் பாதிக்கும். மாணவர்களை இரண்டாம் தர குடிமக்கள் ஆக்கும் நிலையை உருவாக்கும். அரசு கல்வி நிறுவனங்களில் இருந்து மாணவர்களை வெளியே தள்ளுவதற்கான முயற்சிதான் இது.

தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய தலைவர் பேட்டி
மத்திய அரசின் மீது சந்தேகம்: இந்தி படித்தால்தான் மத்திய அரசு பணியில் நுழைய முடியும் என்ற நிலைப்பாட்டை தான் காட்டுகிறது. ஆங்கிலக்கல்வி படித்ததால் தான், உலகம் முழுவதும் சென்று இந்திய மாணவர்கள் முக்கியப் பொறுப்புகளில் பணியாற்றி வருகிறார்கள். அதுபோன்ற கல்வி மாணவர்களுக்கு கிடைக்கக்கூடாது என மத்தியஅரசு நினைக்கிறதோ? என்ற சந்தேகம் எழுகிறது. எனவே, இந்த முடிவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.
வேலைவாய்ப்புகள் கேள்விக்குள்ளாகும்: ஆங்கில அறிவு இல்லாமல் இந்தியை மட்டும் வைத்துக்கொண்டு வெளிநாடுகளில் வேலைக்கு செல்ல முடியாது. ஆகவே, சாஃப்ட்வேர் நிறுவனங்களை வேறு நாடுகளுக்கு கொண்டு செல்லும் நிலை வரும். இந்தியாவில் ஆங்கிலம் எழுதவும், பேசவும் தெரிந்த திறமை உள்ளவர்கள் அதிகம் உள்ளதால் தான் இந்தியாவிலேயே சாஃப்ட்வேர் நிறுவனங்களை நிறுவினார். எனவே, இந்தியைத் திணிக்கக் கூடாது.
திராவிட மாடல்: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 'திராவிட மாடல்' என்று என்று வலியுறுத்தி வருகிறார். இதற்கு காரணம் 65 விழுக்காடு மக்கள் பாரதிய ஜனதா கட்சியை வேண்டாம் என்று நினைக்கின்றனர்.
35 சதவீதம் மக்கள் மட்டுமே ஆதரவு அளிக்கிறார்கள். எனவே, 65 விழுக்காடு மக்களையும் ஒன்று திரட்டி ஒன்றிணைக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் வலியுறுத்தி வருகிறார். அதையேதான் ராகுல் காந்தியும் தெரிவித்துள்ளார்' என்று கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.