ETV Bharat / city

முதலமைச்சர் மீது சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பியவர் கைது! - சேலம் செய்திகள்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு பரப்பிய பாஜக பிரமுகர் அருள் பிரசாத் மீது மூன்று பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவுசெய்து காவல் துறையினர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பியுள்ளனர்.

பாஜக பிரமுகர் அருள் பிரசாத்
பாஜக பிரமுகர் அருள் பிரசாத்
author img

By

Published : Mar 29, 2022, 11:00 PM IST

சேலம்: எடப்பாடி நாச்சிபாளையம் பகுதியில் உணவகம் நடத்தி வரும் சேலம் மேற்கு மாவட்ட பாஜக இளைஞரணி பொதுச் செயலாளர் அருள் பிரசாத்.

இவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அரசு முறைப் பயணமாக துபாய் சென்றது சம்பந்தமாக, அவரது யூட்யூப் சேனல் மற்றும் ட்விட்டரில் கடந்த 26.3.22ஆம்‌ தேதி கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். அதில், துபாய் செல்லும் போது முதலமைச்சர் அணிந்திருந்த கூலிங் ஜாக்கெட் விலை ரூ.17 கோடி என நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்ததாக தவறான கருத்தை யூ-ட்யூப் சேனலில் பரப்பியதோடு, ஏற்கெனவே இதற்கு முன்பும் தமிழ்நாடு முதலமைச்சர் பற்றிய அவதூறான தகவல்களை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக திமுக இளைஞர் அணி எடப்பாடி நகர துணை அமைப்பாளர் பாலசுப்பிரமணியம் என்பவர் கொடுத்தப் புகாரின் பேரில், இன்று (மார்ச் 29) பாஜக பிரமுகர் அருள் பிரசாத்-யை எடப்பாடி காவல்துறையினர் 3 பிரிவுகளின்கீழ் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி உள்ளனர்.

இதையும் படிங்க: கலைக்கு சாதி, மதப்பிரிவினை உண்டா? - கேரளாவில் சம்பவம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.