ETV Bharat / city

படுக்கை வசதி இல்லை... தரையில் படுக்கும் குழந்தைகள்... சரிசெய்யுமா அரசு? - ஆத்தூர் அரசு மருத்துவமனை

சேலம்: ஆத்தூர் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் போதிய படுக்கை வசதிகள் இல்லாததால் நோய் பாதித்த குழந்தைகளை தரையில் படுக்கவைக்கப்படும் அவலநிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

படுக்கை வசதி இல்லாததால் தரையில் படுக்கும் குழந்தைகள்
author img

By

Published : Sep 30, 2019, 10:29 PM IST

சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில், 100க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக ஆத்தூர், அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் மழை பெய்துவருகிறது.

இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வைரஸ் காய்ச்சலால் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள்‌. காய்ச்சலால் பாதிக்கப்படும் அனைவரும் ஆத்தூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர். மருத்துவமனையில் குழந்தைகளை உள்நோயாளியாக அனுமதிக்கும்போது போதிய படுக்கை வசதி இல்லாததால் தரையில் படுக்கவைத்து மருத்துவர்கள் சிகிச்சையளித்து வருகிறார்கள் .

படுக்கை வசதி இல்லாததால் தரையில் படுக்கும் குழந்தைகள்

புறநோயாளியாக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு நாள் ஒன்றுக்கு சுமார் இரண்டாயிரம் பேர் சிகிச்சைக்கு வருகிறார்கள். ஆனால் போதிய அளவில் மருத்துவர்கள் இல்லாததால் பல மணி நேரம் நின்று, காத்திருந்து, சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டிய நிலையுள்ளது. குழந்தைகள் பிரிவுக்கும் போதிய அளவில் மருத்துவர்கள் இல்லாத நிலை எற்பட்டுள்ளது.

ஆகவே, ஆத்தூரில் உள்ள அரசு மருத்துவமனை மாவட்ட மருத்துவமனையாக இருந்தும் போதிய மருத்துவர்கள் இல்லாததால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகிறார்கள். எனவே, தமிழ்நாடு அரசு போதிய மருத்துவர்களை நியமிக்கவும் கூடுதல் எண்ணிக்கையில் நோயாளிகளுக்கான படுக்கை வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும் ஆத்தூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: "How Dare You?" என்ற கேள்வியால் உலகை திரும்பி பார்க்க வைத்த கிரேட்டா தன்பெர்க்

Intro:ஆத்தூர் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் சிகிச்சை பிரிவில் போதிய படுக்கை வசதிகள் இல்லாததால் நோய் பாதித்த குழந்தைகளை தரையில் படுக்க வைக்கப் படும் அவல நிலை உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Body:
சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் , நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சை பெற்று பயனடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஆத்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் பெய்து வரும் மழையால் சீதோசன நிலை மாறி உள்ளது.

இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வைரஸ் காய்ச்சலால் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள் ‌.

காய்ச்சலால் பாதிக்கப்படும் அனைவரும் ஆத்தூர் மருத்துவமனைக்கு அதிகளவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் படுகின்றனர்.

மருத்துவமனையில்
குழந்தைகளை உள் நோயாளியாக அனுமதிக்கப்படும் போது குழந்தைகளுக்கு போதிய படுக்கை வசதி இல்லாத நிலையில் தரையில் படுக்க வைத்து மருத்துவர்கள் குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள் .

புற நோயாளியாக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு வருபவர்கள் சுமார் நாள் ஒன்றுக்கு இரண்டாயிரம் பேர் அளவுக்கு சிகிச்சைக்கு வருகிறார்கள்.

ஆனால் அவர்களுக்கும் போதிய அளவில் மருத்துவர்கள் இல்லாததால் பல மணி நேரம் நின்று காத்திருந்து, சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டிய நிலை உள்ளது .

அதேபோல் குழந்தைகள் பிரிவுக்கும் போதிய அளவில் மருத்துவர்கள் இல்லை .

ஆகவே ஆத்தூரில் உள்ள அரசு மருத்துவமனை மாவட்ட மருத்துவ மனையாக இருந்தும் போதிய மருத்துவர்கள் இல்லாததால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகிறார்கள் .Conclusion:
எனவே,
தமிழக அரசு போதிய மருத்துவர்களை நியமிக்கவும் கூடுதல் எண்ணிக்கையில் நோயாளிகளுக்கான படுக்கை வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆத்தூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.