விருதுநகர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கலைச்செல்வி. சேலம் மகுடஞ்சாவடி பகுதியில் இவரது வீட்டில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
தொடர்ந்து அவரது காரில் சோதனை நடத்தியதில் அதிலிருந்து 24 லட்சம் ரூபாய் பணம், 117 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். மேலும் பல முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
லஞ்ச ஒழிப்பு பிரிவு ஆய்வாளர் தங்கமணி தலைமையில தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருகிறது. இதேபோல விருதுநகர் வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர் .