ETV Bharat / city

மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு திராவிட மாடல் என்று பேச்சளவில் மட்டுமே கூறி வருகிறது:அன்புமணி

மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு திராவிட மாடல் என்று பேச்சளவில் மட்டுமே கூறி வருகிறது என அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Sep 1, 2022, 10:40 PM IST

சேலம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு திராவிட மாடல் என்று பேச்சளவில் மட்டுமே கூறி வருகிறது; மக்களின் அடிப்படை ஆதாரமான நீர் மேலாண்மை உள்ளிட்ட மக்கள் நலத் திட்டங்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

சேலம் மாவட்டம், வீரபாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட பனமரத்துப்பட்டி ஏரியை பார்வையிட்டு நேரில் ஆய்வு செய்தார்.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அன்புமணி ராமதாஸ் பேசுகையில், 'பிரிட்டிஷார் காலத்தில் பராமரிக்கப்பட்ட பனமரத்துப்பட்டி ஏரியானது சேலம் மாநகராட்சியின் குடிநீர் ஆதாரங்களில் முக்கியமான ஏரியாகத் திகழ்கிறது. ஆனால், இந்த ஏரியை முறையாகப் பராமரித்து தூர்வாரி நீர் சேமிக்கப்படவில்லை.

திராவிட மாடல் என்று பேச்சளவில் மட்டுமே தமிழ்நாடு அரசு செயல்படுகிறது. நீர் மேலாண்மை உள்ளிட்ட முக்கிய திட்டங்களுக்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்து, முறையாக நடவடிக்கை எடுத்து அவை நிறைவேற்றப்படவில்லை.மக்களின் அடிப்படைத்தேவை மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக்கருத்தில் கொண்டு நீர் மேலாண்மை திட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு உடனடியாக ஒரு லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

மேலும், காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டம், தாமிரபரணி - நம்பியாறு இணைப்புத்திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதன் மூலம் கடலில் வீணாகும் தண்ணீர் சேமிக்கப்படும். சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை திட்டம் தேவையில்லாதது. சுற்றுச்சூழல் விவசாயத்தைப்பாதிக்கும் எந்த ஒரு திட்டமாக இருந்தாலும்; அதை கொண்டு வரக் கூடாது.

சேலம் - சென்னைக்கு செல்ல ஏற்கெனவே மூன்று வழித்தடங்கள் உள்ள நிலையில் விவசாயிகளைப் பாதிக்கும் எந்த திட்டமும் தேவையில்லை. எட்டு வழிச்சாலைத் திட்டத்தில் திமுகவின் நிலைப்பாடு புரியவில்லை.

திமுக மீது அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

எதிர்க்கட்சியாக இருக்கும்போது எதிர்த்துவிட்டு ஆட்சிக்கு வந்த பிறகு ஆதரிக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் சேலம் - மேட்டூர் உபநீர் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும்' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அடித்தால் மறு கன்னத்தை காட்ட நான் இயேசு அல்ல.. திருப்பி அடிப்பேன்.. அண்ணாமலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.