சேலம்: தென்காசி வடக்கு மாவட்ட அமமுக முன்னாள் செயலாளர் அய்யாதுரை பாண்டியன் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் தங்களை, எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.
சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தென்காசி வடக்கு மாவட்ட அமமுக துணைச் செயலாளர் குமரேச ராஜா, வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் வைரமுத்து, இளைஞர் அணி செயலாளர் ராஜேஷ், சங்கரன்கோவில் தெற்கு ஒன்றிய செயலாளர் பாலமுருகன் மற்றும் பண்பொழி பேரூராட்சி துணைத் தலைவர் நாகலட்சுமி உள்பட 100க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்.
புதிதாக அதிமுகவில் இணைந்தவர்களுக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி துண்டு அணிவித்து வரவேற்று வாழ்த்துத் தெரிவித்தார்.
நிகழ்ச்சியின்போது தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், கடையநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினருமான கிருஷ்ண முரளி, அம்பை சட்டப்பேரவைத்தொகுதி உறுப்பினர் இசக்கி, சுப்பையா ஆகியோர் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: ‘பாரத் ராஷ்டிர சமிதி’ - புதிய தேசிய கட்சியின் பெயரை அறிவித்தார் சந்திரசேகர ராவ்