சேலம்: சின்ன சேலம் பகுதியைச் சேர்ந்தவர் விஜய். இவரது அண்ணன் பிரபு. பிரபுவின் மனைவி மஞ்சு. பிரபு வெளிநாட்டில் வேலை தேடிச் சென்றுவிட்ட நிலையில் மஞ்சு - விஜய் இருவருக்கும் இடையே திருமண பந்தத்தைத் தாண்டிய உறவு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இருவரும் சின்ன சேலத்திலிருந்து அடிக்கடி ஏற்காட்டிற்கு வந்து தனிமையில் தங்கியிருந்துள்ளனர். நேற்று இருவரும் ஏற்காடு பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் இரவு தங்கினர். அப்போது, விஜய் தனக்கு வீட்டில் திருமண ஏற்பாடு செய்வதாக மஞ்சுவிடம் கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மஞ்சு அவரிடம் கடும் வாக்குவாதம் செய்ததாகக் கூறப்படுகிறது. பின்னர், இருவரும் உறங்கச் சென்றுவிட்டனர். உறக்கம் கலைந்து, காலை எழுந்த விஜய், அறையில் மஞ்சு இல்லாததைக் கண்டு விடுதி முழுவதும் தேடியுள்ளார்.
சடலமாக மீட்பு
அப்போது, கழிவறையில் மஞ்சு தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கிடந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த விஜய், காவல் துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
உடனடியாகச் சம்பவ இடத்திற்கு வந்த ஏற்காடு காவல் துணைக் கண்காணிப்பாளர் தையல் நாயகி, ஆய்வாளர் ரஜினி ஆகியோர் மஞ்சுவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பிவைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விஜயிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
காவல் துறை விசாரணை
மஞ்சு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது கொலைசெய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டாரா என்ற கோணத்திலும் ஏற்காடு காவல் துறை விசாரணை நடத்திவருகிறது.
இதையும் படிங்க: ஜோசியத்தை நம்பி தாயும் மகளும் உயிரிழப்பு