சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறை அலுவலர்களுக்கு சான்றிதழ் வழக்கும் நிகழ்ச்சி இன்று (ஜூலை 24) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கோயம்புத்தூர் மேற்கு மண்டல ஐஜி சுதாகர் கலந்துகொண்டு சான்றிதழ்களை வழங்கினார்.
அதையடுத்து செய்தியாளர்களை ஐஜி சுதாகர், "சேலம் சரகத்தில் கடந்த இரண்டு வாரங்களில் 81 கள்ளத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதுதொடர்பாக 52 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் தாமாக முன்வந்து கள்ளத் துப்பாக்கிகளை ஒப்படைத்த 29 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
துப்பாக்கிகளைப் பதுக்கி வைப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கிருஷ்ணகிரியில் துப்பாக்கி தயாரித்து விற்பனை செய்து வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்" எனத் தெரித்தார்.
அதைத்தொடர்ந்து பேசிய அவர், "தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த 528 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 517 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 88 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா, புகையிலை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அதேபோல கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ஒரு லட்சத்து 49 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 21 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: 8 கள்ளத்துப்பாக்கிகள் பறிமுதல்; 6 பேர் கைது!