கோ-ஆப்டெக்ஸ் என அழைக்கப்படும் தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் கடந்த 24 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள கைத்தறி நெசவாளர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் சிறப்பான முறையில் சேவைபுரிந்து வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் அக்டோபர் மாதம் 27ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இதை முன்னிட்டு சேலம் கோ-ஆப்டெக்ஸில் 30 விழுக்காடு சிறப்புத் தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சியர் ராமன் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார். நடப்பாண்டில் ரூபாய் 5 கோடியே 80 லட்சம் விற்பனை இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று விருதுநகரில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் கிளையில் மாவட்ட ஆட்சியர் சிவஞானம் சிறப்பு விற்பனையை தொடங்கிவைத்தார்.
இந்த ஆண்டு உடல்நலத்திற்கும் சுற்றுச் சூழலுக்கும் ஏற்ப ரசாயன உரங்கள் இல்லாமல் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பருத்தியைக் கொண்டு உற்பத்தி செய்யப்பட்ட ஆர்கானிக் புடவை ரகங்கள், பாரம்பரிய ரகங்களை புதுப்பிக்கும் வகையில் செட்டிநாடு சேலைகள், கைத்தறி சுங்கடி சேலைகள் ஆகியவைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.