மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள கீழமாத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக நாகமலை புதுக்கோட்டை காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து காவல் துறையினர் அப்பகுதியில் சென்று ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கும் இங்குமாகச் சுற்றித்திரிந்த கர்ப்பிணி ஒருவரைச் சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்தனர்.
பின் விசாரணை மேற்கொண்டபோது அவர், தனது வயிற்றில் சிறு, சிறு கஞ்சா பொட்டலங்களை மறைத்துவைத்து விற்பனை செய்துவந்ததும் அவர் கீழமாத்தூர் பகுதியைச் சேர்ந்த ராணி என்பதும் தெரியவந்தது.
கர்ப்பிணிபோல் வேடமிட்டு கஞ்சா விற்பனைசெய்த அவரிடமிருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவையும் 400 ரூபாய் பணத்தையும் பறிமுதல்செய்த காவல் துறையினர் அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையிலடைத்தனர்.