ETV Bharat / city

கொடைக்கானலில் பூண்டு கொள்முதல் நிலையம் அமைக்கப்படுமா?

மதுரை: கொடைக்கானலில் நேரடி பூண்டு கொள்முதல் நிலையத்தையும், கிடங்கு வசதியையும் அமைக்கக் கோரிய வழக்கில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர், கொடைக்கானல் நகராட்சி ஆணையர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

garlic
garlic
author img

By

Published : Feb 17, 2021, 12:46 PM IST

கொடைக்கானலைச் சேர்ந்த மனோஜ் இமானுவேல் என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவில், "கொடைக்கானலைச் சுற்றியுள்ள கிராமங்களில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் மலைப்பூண்டு பயிரிடப்படுகிறது. இங்கு விளைவிக்கப்படும் மலைப்பூண்டு, பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டி சந்தைக்கு கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கான போக்குவரத்து செலவே பெருந்தொகையாக உள்ளது.

அதோடு விளைவிக்கப்பட்ட பூண்டை பாதுகாப்பாக வைக்க கிடங்கு போன்ற வசதி இல்லாத காரணத்தால், மழைக்காலங்களில் பூண்டை பாதுகாக்க இயலாத நிலை உருவாகிறது. எனவே, கொடைக்கானலில் நேரடி பூண்டு கொள்முதல் நிலையங்களை அமைத்தால், அருகமை மாவட்டங்களிலிருந்து மட்டுமின்றி, மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து செல்வர். இதனால் விவசாயிகளும் பலனடைவர். இது குறித்து மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. ஆகவே, கொடைக்கானலில் நேரடி பூண்டு கொள்முதல் நிலையத்தையும், கிடங்கு வசதியையும் அமைக்க உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு, இது குறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர், கொடைக்கானல் நகராட்சி ஆணையர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை மார்ச் 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளிக்கும் கட்சிக்கே தேர்தலில் ஆதரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.