ETV Bharat / city

பொதுமக்களுக்கான காத்திருப்பு அறைகள்: காவல் ஆணையருக்கு குவியும் பாராட்டுகள் - மதுரை காவல் துறை

மதுரை மாநகர காவல் நிலையங்களில் பொதுமக்களுக்கான காத்திருப்பு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்குப் பொதுமக்கள் காவல் ஆணையருக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துவருகின்றனர்.

visitors waiting room in madurai police stationsvisitors waiting room in madurai police stations
visitors waiting room in madurai police stations
author img

By

Published : Aug 27, 2021, 10:32 AM IST

மதுரை: மாநகர் காவல் துறை சார்பாக காவல் நிலையத்திற்கு வரும் பொதுமக்களுக்கு உதவுவதற்காக அனைத்து காவல் நிலையங்களிலும் வரவேற்பாளர்கள் நியமிக்கப்பட்டு, புகாரளிக்கவரும் பொதுமக்களுக்கு உதவி செய்துவருகின்றனர்.

மேலும், காவல் நிலையத்திற்கு வரும் பொதுமக்களும், மனுதாரர்களும் காவல் நிலையத்தின் வெளியே காத்திருப்பதைத் தவிர்க்கும்பொருட்டு மதுரை மாநகர் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவின்படி, மதுரை மாநகரின் அனைத்துக் காவல் நிலையங்களிலும் மனுதாரர்களுக்காகக் காத்திருப்பு அறை உருவாக்கப்பட்டு செயல்பட்டுவருகிறது.

visitors waiting room in madurai police stations

இதன்மூலம் பொதுமக்கள் காவல் நிலையத்தில் அலுவலர்களைச் சந்திக்கும்வரை, காத்திருப்பு அறையைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு மதுரை மாநகர காவல் துறையின் சார்பாகக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

புதிதாகக் கட்டப்பட்டுள்ள காவல் நிலையங்களிலும் காத்திருப்பு அறை ஒதுக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளது. பிற காவல் நிலையங்களில் மனுதாரர்கள் பயன்பெறும் வகையில் காவல் நிலையங்களுக்கு வெளியே தனியாக ஒதுக்கப்பட்ட இடத்தில் காத்திருப்பு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மதுரை மாநகர காவல் துறையின் இந்த ஏற்பாடு பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இதற்குப் பொதுமக்கள் காவல் ஆணையருக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துவருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.