ETV Bharat / city

ராஜபக்சவுக்கு அளிக்கப்படும் வரவேற்பு, தமிழர்களை காயப்படுத்தும் செயல்: திருமாவளவன் - கோத்தபய ராஜபக்சேவுக்கு வரவேற்பு

மதுரை: இந்திய அரசு மரபு என்ற பெயரில் கோத்தபய ராஜபக்சவுக்கு வரவேற்பு கொடுத்து, கோடிக்கணக்கான தமிழ் மக்களின் உணர்வுகளை காயப்படுத்தும் விதத்தில் செயல்படுகிறது என விசிக தலைவர் திருமாவளவன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

விசிக தலைவர் திருமாவளவன்
author img

By

Published : Nov 23, 2019, 11:58 PM IST

மதுரை தனியார் விடுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான திருமாவளவன் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அவர் பேசுகையில், “உள்ளாட்சித்தேர்தலில் கவுன்சிலர்கள் மூலம் மேயரை தேர்ந்தெடுக்க அவசரச்சட்டம் இயற்றிருப்பது தேர்தலுக்குப் பிறகு கவுன்சிலர்களை கடத்திச்செல்வதற்கும், குதிரைப்பேரம் நடத்துவதற்கும், ஊழல் முறைகேடுகளுக்கு வழிவகுக்கும்.

கவுன்சிலர்கள் மூலம் மேயரை தேர்ந்தெடுப்பதால் மேயர் சுகந்திரமாக செயல்பட முடியாது. கவுன்சிலர்களின் கட்டுப்பாட்டில் தான் மேயர் இருக்க முடியும். இந்த அவசர சட்டத்தை அரசு ரத்து செய்ய வேண்டும்.

கோத்தபய ராஜபக்சவும், அவரது குடும்பம் மீதும் இனப்படுகொலை குற்றஞ்சாட்டு உள்ளது. இலங்கைத்தமிழர்களை இனப்படுகொலை செய்து, உலகெங்கும் வாழ்கிற தமிழர்கள் பன்னாட்டு விசாரணை கோரும் நேரத்தில், ராஜபக்ச குடும்பத்தைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ள சூழலில் இந்திய அரசு மரபு என்ற பெயரில் கோத்தபய ராஜபக்சவுக்கு வரவேற்பு கொடுப்பதை விடுதலை சிறுத்தைகள் கட்சி எதிர்க்கிறது.

மத்திய அரசு கோடிக்கணக்கான தமிழ் மக்களின் உணர்வுகளைக் காயப்படுத்தும் விதத்தில் செயல்படுகிறது. தமிழ் மக்களின் உணர்வுகளை அரசு மதிக்க வேண்டும். கோத்தபய ராஜபக்ச வருகையை இந்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.

விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி

மகாராஷ்டிராவில் மதச்சார்பற்ற, மதச்சார்பின்மை அரசு ஏற்பட வாய்ப்பிருந்த நேரத்தில் பாஜக- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மதச்சார்பின்மையைக் காப்பாற்றுவது இந்திய அரசியலில் எவ்வளவு கடினமானது என்பதை மகாராஷ்டிராவில் ஆட்சியமைத்த போக்கு காட்டுகிறது” என்று அவர் கூறினார்.

Intro:இந்திய அரசு மரபு என்ற பெயரில் கோத்தபய ராஜபக்சேவுக்கு வரவேற்பு கொடுப்பதை விடுதலை சிறுத்தைகள் கட்சி எதிர்க்கிறது. மத்திய அரசு கோடிக்கணக்கான தமிழ் மக்களின் உணர்வுகளை காயப்படுத்தும் விதத்தில் செயல்படுகிறது என மதுரையில் தொல்.திருமாவளவன் பேட்டிBody:இந்திய அரசு மரபு என்ற பெயரில் கோத்தபய ராஜபக்சேவுக்கு வரவேற்பு கொடுப்பதை விடுதலை சிறுத்தைகள் கட்சி எதிர்க்கிறது. மத்திய அரசு கோடிக்கணக்கான தமிழ் மக்களின் உணர்வுகளை காயப்படுத்தும் விதத்தில் செயல்படுகிறது என மதுரையில் தொல்.திருமாவளவன் பேட்டி.

மதுரை தனியார் விடுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அவர் பேசுகையில்,

உள்ளாட்சித்தேர்தலில் கவுன்சிலர்கள் மூலம் மேயரை தேர்ந்தெடுக்க அவசரச்சட்டம் இயற்றிருப்பது தேர்தலுக்கு பிறகு கவுன்சிலர்களை கடத்திச்செல்வதற்கும், குதிரைப்பேரம் நடத்துவதற்கும், ஊழல் முறைகேடுகளுக்கு வழிவகுக்கும். கவுன்சிலர்கள் மூலம் மேயரை தேர்ந்தெடுப்பதால் மேயர் சுகந்திரமாக செயல்பட முடியாது. கவுன்சிலர்களின் கட்டுப்பாட்டில் தான் மேயர் இருக்க முடியும். இந்த அவசர சட்டத்தை அரசு ரத்து செய்ய வேண்டும்.

இனப்படுகொலை குற்றவாளி என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளான கோத்தபய ராஜபக்சேவும், அவரது குடும்பமும் உள்ளது. இலங்கைத்தமிழர்களை இனப்படுகொலை செய்து, உலகெங்கும் வாழ்கிற தமிழர்கள் பன்னாட்டு விசாரணை கோரும் நேரத்தில், ராஜபக்சே குடும்பத்தை குற்றவாளி கூண்டில் நிறுத்தி விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ள சூழலில்

இந்திய அரசு மரபு என்ற பெயரில் கோத்தபய ராஜபக்சேவுக்கு வரவேற்பு கொடுப்பதை விடுதலை சிறுத்தைகள் கட்சி எதிர்க்கிறது. மத்திய அரசு கோடிக்கணக்கான தமிழ் மக்களின் உணர்வுகளை காயப்படுத்தும் விதத்தில் செயல்படுகிறது. தமிழ் மக்களின் உணர்வுகளை அரசு மதிக்க வேண்டும். கோத்தபய ராஜபக்சே தனது வருகை எண்ண வேண்டும்.கோத்தபய ராஜபக்சே வருகையை இந்திய அரசு பரிசீலிக்க வேண்டும். மகாராஷ்டிராவில் மதசார்ப்பற்ற, மதசார்பின்மை அரசு ஏற்பட வாய்ப்பிருந்த நேரத்தில் பாஜக- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மதசார்பின்மையை காப்பாற்றுவது இந்திய அரசியலில் எவ்வளவு கடினமானது என்பதை மகாராஷ்டிராவில் ஆட்சியமைந்த போக்கு காட்டுகிறது.மகாஷ்டிரா விவகாரம் ஜனநாயகத்தின் மதசார்பின்மையின் நன்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கி, சந்தேகத்தை, கவலையை அதிகப்படுத்தி உள்ளது.1997ல் நடைபெற்ற மேவளவு மிக கொடூரமான நாட்டையே உலுக்கிய படுகொலை. மேலவளவு கொலைக்குற்றவாளிகளை விடுதலை செய்தது ஒட்டுமொத்த தலீத் மக்களுக்கு எதிரான நடவடிக்கை. இது குறித்து முதல்வருக்கு சுட்டிக்காட்டினேன்.இது தவறான முன்மாதிரியாக அமைந்துவிடும். அரசு இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இது ஒரு தவறான முன்மாதிரியாக அமைந்துவிடும் இது ஒரு கோரிக்கையாக அரசுக்கு வைக்கிறேன். மதுரையில் நடக்கும் ஜல்லிக்கட்டுப்போட்டிகளில் அனைத்து சமுதாய மக்களும் பிரதிநிதியாய் உள்ளது போல, ஆதிதிராவிட தலித் மக்களுக்கு பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும். அரசு விழாவாக நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் அனைத்து சமுதாய மக்களும் இடம் பெற வேண்டும். அரசு இதனை பரிிசீலிக்க வேண்டும். மகாராஷ்டிராவில் நடைபெற்றுள்ள நிகழ்வு ஒரு ஆபத்தான அறிகுறி. மதவாத சக்திகளால் மதசார்பின்மையை கட்டுப்படுத்த முடியும் என்பதையே இது காட்டுகிறது. அதிமுக- விடுதலை சிறுத்தை கட்சி கூட்டணி ஏற்பட வாய்ப்புண்டா என்ற கேள்விக்கு,

காழ்ப்புணர்ச்சி கொண்டவர்களால் பரப்பபடுகிற வதந்தி.

முதலமைச்சரை அதிக முறை சந்தித்து பேசியுள்ளேன். முதல்முறை சந்தித்து பேசவில்லை.

மேலவளவு படுகொலை விவகாரம், உள்ளாட்சித்தேர்தலில் தலித் மக்களுக்கு பிரதிநிதித்துவம், இடஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியே முதல்வரை சந்தித்தேன். தமிழக பாலில் நச்சுத்தன்மை அதிகம் உள்ளது என்பது அதிர்ச்சியளிக்கிறது. அத்தியாவசிய உணவுப்பொருளில் பால் ஒன்று. தமிழக பாலில் நச்சு உள்ளது என்று மத்திய அரசே அதற்கு சான்றிதழ் அளித்துள்ளது.இது குறித்து மத்திய அரசு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும். இது மேலும் அதிர்ச்சியளிக்கிறது.

பஞ்சமி நில விவகாரத்தில் பாஜக குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு,

எவ்வளவோ இந்துக்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர், குடிசைகள் கொளுத்தப்பட்டுள்ளன. சொத்துக்கள் சூறையாடப்பட்டுள்ளன. ஆணவ படுகொலைகள் நிகழ்ந்துள்ளன. அப்போது எந்தக்கேள்வியும் கேட்காத பாஜகவினர், ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் அரசியல் லாபத்திற்காக பேசுகின்றனர்.

அரசியல் லாபத்திற்காக இது போன்ற குற்றச்சட்டுக்களை முன்வைக்கின்றனர். மக்களிடம் அவர்கள் அம்பலப்பட்டு நிற்பார்கள் என்று பேசினார்.அவர்கள் யார் எந்தப்பின்னணியில் செய்கிறார்கள் என்பதை மக்கள் அறிவார்கள்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.