மதுரை: பாண்டி கோயில் பகுதியில் பிறந்த அக்டோபர் 7ஆம் தேதி இரவு கல்லூரி மாணவர்கள் சிலர் இருசக்கர வாகன சாகசத்தில் ஈடுபட்டனர். தலைக்கவசம் அணியாமல் அதிவேகமாக தங்களது இருசக்கர வாகனத்தை ஒட்டி பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தினர். இதுகுறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது.
இதனையடுத்து அந்த வீடியோ காட்சி பதிவுகளை கைப்பற்றிய காவல்துறையினர் இருசக்கர வாகன சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை கைது செய்யும் பொருட்டு வழக்குப்பதிவு செய்தனர். அதன்படி, தபால் தந்திநகர் பகுதியை சேர்ந்த தீனதயாள பாண்டியன்(20), அனுப்பானடியைச் சேர்ந்த சந்தானராஜ் (19) ஆகிய இருவரையும் காவல் துறையினர் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
வீடியோவில் பதிவாகியுள்ள மேலும் சில இளைஞர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இது போன்று இருசக்கர வாகனங்களில் அதிக வேகமாகவும், வீலிங் (Wheeling) செய்தும் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை உண்டாக்கக்கூடிய வகையில் வாகனங்களை ஓட்டிச் செல்லும் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மீது கடுமையான சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாநகர காவல்துறை சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: டன் கணக்கில் குட்கா கடத்திய குற்றவாளி மீது பாய்ந்த குண்டர் சட்டம்