ETV Bharat / city

இரட்டை ரயில் பாதை பணிகள் காரணமாக ரயில் போக்குவரத்தில் மாற்றம் - தென்னக ரயில்வே மதுரை கோட்டம்

திருமங்கலத்தில் இரட்டை ரயில் பாதைக்கான இணைப்புப் பணிகள் நடைபெறுவதால் ரயில் போக்குவரத்தில் மாற்றம்செய்யப்பட்டுள்ளது என மதுரை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

Train schedule change in Madurai Railway Region due to double way track work , தென்னக ரயில்வே மதுரை கோட்டம், மதுரை
இரட்டை ரயில் பாதை பணிகள் காரணமாக ரயில் போக்குவரத்தில் மாற்றம்
author img

By

Published : Mar 31, 2021, 3:14 PM IST

மதுரை: திருமங்கலம் ரயில் நிலையத்தில் இரட்டை ரயில் பாதை இணைப்பு வேலைகள் நடைபெறுகின்ற காரணத்தால் ரயில் போக்குவரத்தில் கீழ்க்கண்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

வண்டி எண் 02628 திருச்சி-திருவனந்தபுரம் பகல் நேர சிறப்பு ரயில் முழுமையாக ரத்துசெய்யப்படுகிறது. வண்டி எண் 06321/06322 நாகர்கோவில்-கோயம்புத்தூர்-நாகர்கோவில் சிறப்பு ரயில், திருநெல்வேலி - திண்டுக்கல் ரயில் நிலையங்கள் இடையே பகுதியாக ரத்துசெய்யப்படுகிறது.

இன்று (மார்ச் 31) திருநெல்வேலி, நாகர்கோவிலிலிருந்து புறப்பட்ட வண்டி எண் 06072 திருநெல்வேலி - தாதர் சிறப்பு ரயில், வண்டி எண் 06340 நாகர்கோயில் - மும்பை சி.எஸ்.டி. சிறப்பு ரயில் ஆகியவை திருவனந்தபுரம் சோரனூர் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.

நேற்று (மார்ச் 30) திருவனந்தபுரத்திலிருந்து புறப்பட்ட வண்டி எண் 06343 திருவனந்தபுரம் - மதுரை அமிர்தா சிறப்பு ரயில், இன்று மதுரையிலிருந்து புறப்படும் வண்டி எண் 06344 மதுரை - திருவனந்தபுரம் அமிர்தா சிறப்பு ரயில் ஆகியவை திண்டுக்கல் - மதுரை ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்துசெய்யப்படுகிறது எனத் தென்னக ரயில்வே மதுரை கோட்டம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: தென் மாவட்ட ரயில்கள் தாமதம்: தென்னக ரயில்வே அறிவிப்பு

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.