ETV Bharat / city

திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதி - ஒரு பார்வை - சரவணன்

மதுரை: திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதி குறித்த ஒரு பார்வை.

thiruparangundram
author img

By

Published : Apr 22, 2019, 3:49 PM IST

தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் முக்கியத்துவம் வாய்ந்த தொகுதி திருப்பரங்குன்றம். அதிக இளம் வாக்காளர்களைக் கொண்ட தொகுதி. தேர்தல் ஆணையத்தால் கடந்த ஜனவரி 31, 2019 அன்று வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி திருப்பரங்குன்றம் தொகுதியின் வாக்காளர்களில் ஆண்கள் 1,49,421 பேர், பெண்கள் 1,52,111 பேர், மூன்றாம் பாலினத்தவர் 25 பேர் என மொத்தம் 3,01,557 பேர் உள்ளனர்.

திருப்பரங்குன்றம் விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட சட்டப்பேரவை தொகுதியாகும். அதுமட்டுமன்றி தமிழகத்திலேயே 18-லிருந்து 19 வயதுக்குள் உள்ள அதிக இள வயது வாக்காளர்களைக் (7,696 பேர்) கொண்ட தொகுதியாகும். மொத்த வாக்காளர் எண்ணிக்கையில் 2.6 விழுக்காடு. அதே வயதுடைய தமிழகத்தின் மொத்த வாக்காளர்களில் (8,98,979 பேர்) இது 0.9 விழுக்காடாகும்.

திருப்பரங்குன்றம், விளாச்சேரி, வடிவேல்கரை, நாகமலை, கீழக்குயில்குடி, மேலக்குயில்குடி, தோப்பூர், தனக்கன்குளம், விரகனூர், சிலைமான் உள்ளிட்ட முக்கிய கிராமங்களையும் சின்ன அனுப்பானடி, திருப்பரங்குன்றம், திருநகர், ஹார்விபட்டி, அவனியாபுரம் உள்ளிட்ட பேரூராட்சிகளையும் கொண்டுள்ளது. கடந்த 1957-ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்று வரும் திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் 2 முறையும், திமுக 5 முறையும், அதிமுக 8 முறையும், தேமுதிக ஒருமுறையும் வென்றுள்ளன.

தமிழக சட்டப்பேரவையின் முன்னாள் தலைவர் கே.காளிமுத்து, காவேரிமணியம், ஆண்டித்தேவர், செ.ராமச்சந்திரன் ஆகியோர் இந்த தொகுதியில் வெற்றி பெற்ற விஜபி வேட்பாளர்களாவர்.

இந்தப் பகுதியின் பிரதான தொழிலாகக் கருதப்படுவது விவசாயம்தான். நெசவுத் தொழிலும் முக்கிய அங்கம் வகிக்கிறது. நெல், கரும்பு, வாழை, மலர் விவசாயம்தான் முக்கியத் தொழில். சொல்லிக் கொள்ளும்படியான தொழில் நிறுவனங்கள் இப்பகுதியில் இல்லை.

மலர், காய்கறிகள், பழங்கள் பதனிடப்படும் கூடங்கள் அமைக்கப்பட வேண்டும். வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடிய நிறுவனங்கள், தொழிற்சாலைகள் பெருக வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கைகளாக உள்ளன.

கடந்த 2016ஆம் ஆண்டு அதிமுக சார்பாக இத்தொகுதியிலிருந்து தேர்வு பெற்ற எஸ்.எம்.சீனிவேல் ஜெயலலிதான தலைமையிலான அதிமுக அரசு பதவியேற்பு விழா நடைபெறுவதற்கு முன்பே மே 25-ம் தேதி திடீரென காலமானார். இதனையடுத்து கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் 19-ஆம் தேதி மீண்டும் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஏ.கே.போஸ் வென்றார்.

இதற்கிடையே ஏ.கே.போஸூம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி மாரடைப்பால் காலமானதையடுத்து, அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெயலலிதாவின் கையொப்பம் குறித்து சர்ச்சைகள் கிளம்பி, திமுக வேட்பாளராகப் போட்டியிட்டு தோற்றுப்போன டாக்டர் சரவணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அந்த வழக்கின் காரணமாக இங்கு இடைத்தேர்தல் நடைபெறுவது தள்ளிக் கொண்டே போனது.

தமிழக தேர்தல் ஆணையம் தமிழகத்தில் தற்போது காலியாக உள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் (தனி), சூலூர் ஆகிய தொகுதிகளுக்கு மே 19-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளதாக அறிவித்துள்ளது.

மேற்கண்ட நான்கு தொகுதிகளிலும் வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கி, ஏப்ரல் 29-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 30ஆம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்படுகின்றன. வேட்பு மனுக்கள் திரும்பப் பெற மே 2ஆம் தேதி கடைசி நாளாகும். அண்மையில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 23-ஆம் தேதியே மேற்கண்ட சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும். இத்தொகுதியில் திமுக வேட்பாளராக டாக்டர் சரவணன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளராக மகேந்திரனும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி - ஒரு பார்வை

தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள 4 தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் முக்கியத்துவம் வாய்ந்த தொகுதி திருப்பரங்குன்றம். முருகனின் அறுபடை வீடுகளில் முதற்படை வீடாகவும், ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்தது மட்டுமன்றி, அதிக இளம் வாக்காளர்களைக் கொண்ட தொகுதியும்கூட.

தேர்தல் ஆணையத்தால் கடந்த ஜனவரி 31, 2019 அன்று வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி திருப்பரங்குன்றம் தொகுதியின் வாக்காளர்களில் ஆண்கள் 1,49,421 பேர், பெண்கள் 1,52,111 பேர், மூன்றாம் பாலினத்தவர் 25 பேர் என மொத்தம் 3,01,557 பேர் உள்ளனர். 

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதியாகும். அதுமட்டுமன்றி தமிழகத்திலேயே 18-லிருந்து 19 வயதுக்குள் உள்ள அதிக இள வயது வாக்காளர்களைக் (7,696 பேர்) கொண்ட தொகுதியாகும். இது மொத்த வாக்காளர் எண்ணிக்கையில் 2.6 சதவிகிதம். அதே வயதுடைய தமிழகத்தின் மொத்த வாக்காளர்களில் (8,98,979 பேர்) இது 0.9 சதவிகிதமாகும்.

திருப்பரங்குன்றம், விளாச்சேரி, வடிவேல்கரை, நாகமலை, கீழக்குயில்குடி, மேலக்குயில்குடி, தோப்பூர், தனக்கன்குளம், விரகனூர், சிலைமான் உள்ளிட்ட முக்கிய கிராமங்களையும்  சின்ன அனுப்பானடி, திருப்பரங்குன்றம், திருநகர், ஹார்விபட்டி, அவனியாபுரம் உள்ளிட்ட பேரூராட்சிகளையும் கொண்டுள்ளது.

கடந்த 1957-ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்று வரும் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் 2 முறையும், திமுக 5 முறையும், அதிமுக 8 முறையும், தேமுதிக ஒருமுறையும் வென்றுள்ளன.

தமிழக சட்டப்பேரவையின் முன்னாள் தலைவர் கே.காளிமுத்து, காவேரிமணியம், ஆண்டித்தேவர், செ.ராமச்சந்திரன் ஆகியோர் இந்த தொகுதியில் வெற்றி பெற்ற விஜபி வேட்பாளர்களாவர்.

மதுரை மாநகராட்சிக்கு உள்பட்ட திருப்பரங்குன்றம், முருகனின் அறுபடை வீடுகளில் முதற்படை வீடாகப் போற்றப்படும் ஆன்மீகத் திருத்தலமாகும். வெளி மாநிலத்தவர் மட்டுமன்றி, பல்வேறு நாடுகளைச் சேர்ந்தோரும் கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.

இந்தப் பகுதியின் பிரதான தொழிலாகக் கருதப்படுவது விவசாயம்தான். நெசவுத் தொழிலும் முக்கிய அங்கம் வகிக்கிறது. நெல், கரும்பு, வாழை, மலர் விவசாயம்தான் முக்கியத் தொழில். சொல்லிக் கொள்ளும்படியான தொழில் நிறுவனங்கள் இப்பகுதியில் இல்லை. மலர், காய்கறிகள், பழங்கள் பதனிடப்படும் கூடங்கள் அமைக்கப்பட வேண்டும். வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடிய நிறுவனங்கள், தொழிற்சாலைகள் பெருக வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கைகளாக உள்ளன.

கடந்த 2016-ஆம் ஆண்டு அதிமுக சார்பாக இத்தொகுதியிலிருந்து தேர்வு பெற்ற எஸ்.எம்.சீனிவேல் ஜெயலலிதான தலைமையிலான அதிமுக அரசு பதவியேற்பு விழா நடைபெறுவதற்கு முன்பே மே 25-ம் தேதி திடீரென காலமானார். இதனையடுத்து கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் 19-ஆம் தேதி மீண்டும் நடைபெற்ற இடைத் தேர்தலில் ஏ.கே.போஸ் வென்றார்.

இதற்கிடையே ஏ.கே.போஸ் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 1-ஆம் தேதி மாரடைப்பால் காலமானதையடுத்து, அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. திருப்பரங்குன்றம் சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா கையொப்பம் குறித்து சர்ச்சைகள் கிளம்பி, திமுக வேட்பாளராகப் போட்டியிட்டு தோற்றுப்போன டாக்டர் சரவணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அந்த வழக்கின் காரணமாக இங்கு இடைத்தேர்தல் நடைபெறுவது தள்ளிக் கொண்டே போனது.

தமிழக தேர்தல் ஆணையம் தமிழகத்தில் தற்போது காலியாக உள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் (தனி), சூலூர் ஆகிய தொகுதிகளுக்கு மே 19-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளதாக அறிவித்துள்ளது.

மேற்கண்ட நான்கு தொகுதிகளிலும் வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கி, ஏப்ரல் 29-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 30-ஆம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்படுகின்றன. வேட்பு மனுக்கள் திரும்பப் பெற மே 2-ஆம் தேதி கடைசி நாளாகும்.

அண்மையில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 23-ஆம் தேதியே மேற்கண்ட சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும்.

இத்தொகுதியில் திமுக வேட்பாளராக டாக்டர் சரவணன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளராக மகேந்திரனும் அறிவிக்கப்பட்டுள்ளனர். 

(இதற்குரிய விஷுவல் மோஜோவில்)
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.