ETV Bharat / city

‘தமிழ்நாட்டில் வெற்றிடம் இல்லை’ - அமைச்சர் செல்லூர் ராஜூ - adurai district news

மதுரை: ரஜினி கூறுவது போல தமிழ்நாட்டில் எந்த வெற்றிடமும் இல்லை என்றும், அவ்வாறு ஏற்பட்ட வெற்றிடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிரப்பிவிட்டார் எனவும் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

sellur raju
author img

By

Published : Nov 9, 2019, 11:58 PM IST

மதுரை வைகை ஆற்றிலிருந்து வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் பணியைக் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார்.

இதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ‘தமிழ்நாட்டில் ரஜினி சொல்வது போல் எந்த வெற்றிடமும் இல்லை. அப்படி தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெற்றிடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிரப்பிவிட்டார். ரஜினிக்கு அடுத்து இரண்டு படங்கள் வரவிருக்கிறது.

வெற்றிடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிரப்பி விட்டார் - அமைச்சர் செல்லூர் ராஜூ

அதற்காக இதுபோல் பரபரப்பாக பேசிவருகிறார். தமிழ்நாட்டில் மதசார்பற்ற அரசு நடைபெற்று வருகிறது. நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தோழமை கட்சிகளின் பலமில்லாமல் நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோம். இதன் மூலம் மக்கள் அதிமுக அரசிற்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்பது உறுதியாகியுள்ளது" என்றார்.

இதையும் படிங்க: சாலை விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிதியுதவி!

Intro:தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் ஏதும் இல்லை, ரஜினிக்கு இரண்டு படம் வெளி வர இருப்பதால் பரபரப்பாக பேசி வருகிறார்,Body:

தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் ஏதும் இல்லை, ரஜினிக்கு இரண்டு படம் வெளி வர இருப்பதால் பரபரப்பாக பேசி வருகிறார்,

நாங்குநேரி, விக்கிரவாண்டியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் தோழமைகளின் பலம் இல்லாமல் வெற்றி பெற்றோம் என அமைச்சர் செல்லூர் கே.ராஜு பேட்டி

மதுரை வைகையாற்றில் இருந்து வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் பணியை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், "தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் ஏதும் இல்லை, ரஜினிக்கு இரண்டு படம் வெளி வர இருப்பதால் பரபரப்பாக பேசி வருகிறார், தமிழகத்தில் மதசார்பற்ற அரசு நடைபெற்று வருகிறது, நாங்குநேரி, விக்கிரவாண்டியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் தோழமைகளின் பலம் இல்லாமல் வெற்றி பெற்றோம், இடைத்தேர்தலில் மக்கள் அதிமுகவுக்கு ஆதரவு அளித்து உள்ளார்கள்" என கூறினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.