ETV Bharat / city

மீனவர் ராஜ்கிரணின் உடலில் காயமில்லை - மனுதாரர் தரப்பில் நீதிமன்றத்தில் தகவல் - மீனவர் ராஜ்கிரணின் மனைவி பிருந்தா மனு

இலங்கை கடற்படை ரோந்து கப்பல் இடித்ததால் நடுக்கடலில் மூழ்கி உயிரிழந்ததாகக் கூறப்படும் மீனவர் ராஜ்கிரணின் உடலில் காயங்கள் ஏதுமில்லை என உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுதாரர் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

dfs
dgfs
author img

By

Published : Nov 27, 2021, 10:46 AM IST

மதுரை: கோட்டைபட்டினத்தைச் சேர்ந்த மீனவர் ராஜ்கிரணின் மனைவி பிருந்தா உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல்செய்திருந்தார். அதில், "புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி இறங்கு தளத்திலிருந்து ராஜ்கிரண், சுகந்தன், சேவியர் ஆகிய மூன்று பேரும் படகில் நடுக்கடலில் அக்டோபர் 19ஆம் தேதி மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டிவந்து மீன்பிடித்ததாகக் கூறி தங்களது ரோந்துக் கப்பல் மூலம் மீனவர்களின் படகை இடித்ததில் படகு பழுதாகி நடுக்கடலில் மூழ்கியது.

இதையடுத்து, சுகந்தன், சேவியர் ஆகிய இரண்டு பேரையும் இலங்கை கடற்படையினர் மீட்டனர். இரண்டு நாள்கள் தேடலுக்குப் பிறகு ராஜ்கிரண் சடலமாக மீட்கப்பட்டார். இறந்த மீனவர் ராஜ்கிரணின் உடலை, உடற்கூராய்வு செய்யப்பட்டு பன்னாட்டு எல்லையில், இலங்கை கடற்படை இந்திய கடற்படையிடம் ஒப்படைத்தது.

பெட்டியில் இருந்த உடலை முழுவதும் திறந்து காட்டாமல் அடக்கம் செய்துவிட்டனர். எனவே, ராஜ்கிரண், இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது. எனவே ராஜ்கிரன், உடலை மறு உடற்கூராய்வு செய்ய உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு நேற்று நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், "மறு உடற்கூராய்வு செய்யப்பட்டதில் மீனவரின் உடலில் எவ்விதமான காயங்களும் இல்லை எனத் தெரியவந்துள்ளது. ஆனால் இலங்கையில் மீனவரின் உடல் உடற்கூராய்வு செய்யப்பட்ட பின்னர் தைக்கப்படாமலும், உடைகள் அணிவிக்கப்படாமலும் அப்படியே பெட்டியில் வைத்து கொடுக்கப்பட்டுள்ளது. இது ஒரு உடலுக்கான மாண்பை மீறும் வகையில் உள்ளது.

இதுபோல வெளிநாடுகளிலிருந்து அனுப்பப்படும், குறிப்பாக இலங்கையிலிருந்து அனுப்பப்படும் மீனவர்களின் உடலுக்கான உரிய மாண்பு வழங்கப்படுவதில்லை. அது தொடர்பாக உரிய வழிகாட்டுதல்களைப் பிறப்பிக்க வேண்டும்" எனக் கோரிக்கைவிடுத்தார். இதையடுத்து நீதிபதி, மத்திய அரசை நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கில் சேர்ப்பதாகக் குறிப்பிட்டு வழக்கை டிசம்பர் 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த வெள்ளம்: முத்துநகருக்கு ரெட் அலர்ட்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.