ETV Bharat / city

ஓய்வு வயது 60: அரசாணையை ரத்துசெய்த கோரிய விசாரணை ஒத்திவைப்பு - Tamilnadu Govt

மதுரை: அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை 60 ஆக உயர்த்திய அரசாணையை ரத்துசெய்து உத்தரவிட வேண்டும் எனக் கோரிய வழக்கிற்கு, தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல்செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்றம் மதுரை கிளை
உயர் நீதிமன்றம் மதுரை கிளை
author img

By

Published : Mar 19, 2021, 9:58 PM IST

மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த கோபிநாத் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல்செய்திருந்தார்.

அதில் குறிப்பிட்டிருந்ததாவது, "தமிழ்நாடு தலைமைச் செயலர் பிப்ரவரி 25ஆம் தேதி அரசாணை எண் 29ஐ பிறப்பித்தார். அதன்படி ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் உள்பட அனைத்து அரசுத் துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கும், ஓய்வுபெறும் வயது உயர்வு என்பது பொருந்தும்.

இதன் காரணமாக வேலையில்லா திண்டாட்டம், வறுமை போன்றவற்றால் தமிழ்நாடு இளைஞர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவர். இளைஞர்களின் அரசுப் பணி கனவு நிறைவேறாமல் போக வாய்ப்புண்டு.

ஆகவே ஓய்வுபெறும் வயதை 60 ஆக உயர்த்திய அரசாணையை ரத்துசெய்து உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சுந்தரேஷ், ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இது குறித்து தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல்செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.